இனவெறிக்குத் துணைபோகும் இந்தியா இலங்கைக்கு எதிரான அய்.நா.தீர்மானம் - இந்தியா புறக்கணிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

இனவெறிக்குத் துணைபோகும் இந்தியா இலங்கைக்கு எதிரான அய்.நா.தீர்மானம் - இந்தியா புறக்கணிப்பு!

ஜெனீவா, அக். 7- இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம் செய் யப்பட்டது. இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009இல் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட் டதாக புகார் எழுந்தது. 'இது தொடர்பாக, இலங்கைக்கு எதி ராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, அய்.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

கடந்த 2012 - 2014இல், அப் போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, அய்.நா. மனித உரிமை கவுன்சிலில், அந்த தீர்மானங்கள் இரண்டு முறை தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தின் கூட்டம் நடைபெற்றது. ஜெனிவாவில் உள்ள அய்நா மனித உரிமைகள் பேரவையில் இலங் கைக்கு எதிராக கொண்டு வரப் பட்ட போர்க்குற்ற தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக் கணிப்பு செய்தது. இந்த வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான், நேபாளம் மற்றும் கத்தார் உள்பட 20 நாடுகள் ஆதரவளிக்காமல் புறக்கணித்தன. சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

எனினும், தீர்மானத்திற்கு ஆதர வாக இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, பராகுவே, போலந்து, கொரியா குடியரசு மற்றும் உக் ரைன் ஆகிய 20 நாடுகள் வாக்க ளித்தன. 

இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் வெற்றிகர மாக நிறைவேற்றம் செய் யப்பட் டது. இதன்முலம், 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்கு வித்தல்' தொடர்பான வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை விசாரித்து அதற்கு காரணமான வர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்பது தீர்மானத்தில் உள்ள முக்கிய அம்சம் ஆகும். இந்நிலையில், இலங்கை தமிழர்க ளுக்கு சம உரிமை கிடைக்க உறுதுணையாக இருப்போம் என்று அய்க்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இந்தியா உறுதியளித்துள்ளது. அதேபோல, சீனாவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த தீர்மானம் மீது வாக் களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு செய்தது.

No comments:

Post a Comment