ஈரோடு மாநகரில் பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

ஈரோடு மாநகரில் பெரியார் பிறந்த நாள் விழா

ஈரோடு, அக். 5- தந்தை பெரியார்  144ஆவது பிறந்த நாளில் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு.த.சண்முகம் தலைமையில் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக சார்பில் மாவட்ட தலைவர் கு.சிற் றரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி எடுக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் இரா.நற்குணன்,கோவை மண்டல தலை வர்.ஆ. கருணாகரன், மாவட்ட செயலாளர் மா.மணி மாறன், பேராசிரியர் ப.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள்.கோ.பாலகிருஷ்ணன்,து.நல்ல சிவம்,செ.பிரகாசன், மாவட்ட தொழிலாள ரணி செயலாளர்.தே.காமராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப் பாளர்.பி.என்.எம்.பெரியசாமி,கோ.திரு நாவுக்கரசு, சத்தியமூர்த்தி, பவானி.கிருஷ்ணமூர்த்தி, மாநகர செயலாளர் வீ.தேவ ராஜ், சா.ஜெப ராஜ் செல்லத்துரை, ப. தமிழ்ச்செல்வன், மாலதி பெரியசாமி, கவிதா மணிமாறன், மகேஸ்வரி ஜெயசந்திரன், விஜயலட் சுமி தேவராஜ், விஜயமங் கலம் ச.சசிதரன், சுவாதி சசிதரண், நா.மோகன் ராஜ், ம.அன்புபிரசாந்த், ஆ.பிரபு, தே.தேவேந்தி ரன், குருவை.மணிமாறன், ஜெயராணி சத்தியமூர்த்தி, கி.பிரபு, அஜ்சூரியா, திருப்பூர்.சரவணன், கு.ரவிக்குமார், பெரியார் பிஞ்சுகள் ஜீ.கா.கயல்விழி, க.மா.அருவி, உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்க தோழர் கள் பெருந்திரளான கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் பிரமாண்டமான ஊர்வ லம் ஈரோடு சம்பத் நகரில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா முடிய நடை பெற்றது இதில் திமுகழக துணைப் பொதுச் செய லாளர். அந்தியூர் ப.செல் வராஜ்,திமுக சுற்றுப்புறச் சூழல் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதி பதி, மாநகர திமுக செய லாளர் சுப்பிரமணியம், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர். அதிய மான், திராவிடர் கழகம் சார்பில் மாநில அமைப் புச் செயலாளர் ஈரோடு .த. சண்முகம்ஸத லைமை யில் கழக மண்டல, மாவட்ட, மாநகர, ஒன் றிய, கிளைக் கழக பொறுப் பாளர்கள், இயக்க தோழர்கள் உள் ளிட்ட பெரியார் உணர் வாளர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

No comments:

Post a Comment