பெங்களூரு, அக்.10 கருநாடகாவில் நடந்த ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தேச ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் (செப்டம்பர்) 7ஆம் தேதி நடைபயணத்தைத் தொடங் கினார். கன்னியாகுமரியில் தொடங் கிய இந்த நடைப்பயணம் கேரளாவில் 19 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதே மாதம் 30-ஆம் தேதி ராகுல் காந்தியின் நடைப்பயணம் சாம்ராஜ்பேட்டை மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக கருநாடகத்திற்கு வந்தது. அங்கு ராகுல் காந்திக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு, மைசூரு, மண்டியா வழியாக நடைப் பயணம் துமகூரு மாவட்டத்திற்கு வந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று (9.10.2022) தனது 32-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டார். இது கருநாடகத்தில் 8-ஆவது நாளாக நடக்கும் நடைப்பயணம் ஆகும். காலை 6.30 மணிக்கு துமகூரு மாவட்டத்தில் இருந்து ராகுல் காந்தி நடைப்பயணம் தொடங்கி 7 மணி வரை சிக்கநாயக்கனஹள்ளி ஹுலியூர் பொச்கட்டே பகுதிக்கு வந்தடைந்தார். அத்துடன் நேற்றைய நடைப்பயணம் நிறைவடைந்தது. சுமார் 30 கி.மீ. தூரம் நடைப்பயணம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு ஹுலியூரில் ராகுல் காந்தி தங்கினார். இந்த நிலையில் நடைப்பயணத்தின் 33ஆ-வது நாளில் தும்கூர் மாவட்டத்தில் உள்ள போச்சட்டேயில் இருந்து 'பாரத் ஜோடோ யாத்திரை'யை மீண்டும் தொடங்கினார். காலை 6.30 மணிக்கு ராகுல் காந்தியின் நடைப் பயணம் அங்கிருந்து தொடங்கியது. நடைப் பயணத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment