பஞ்சாப் ஆளுநர் புகாரை தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் இரா.முத்தரசன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

பஞ்சாப் ஆளுநர் புகாரை தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை,அக்.23- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர்  இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,

பஞ்சாப் மாநில ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித், தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூபாய் 50 கோடி வரை விற்பனை செய்யப்பட் டுள்ளது என்று பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் ஆளுநராக நான் காண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அந்தக் காலத்தில் 27 துணை வேந் தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு அதிகாரம் பெற்ற உயர் பொறுப்பில் உள்ளவர் கூறும் “புகாரை” வெறும் செய்தியாக கடந்து சென்றுவிட முடியாது.

தமிழ்நாட்டின் மேனாள் ஆளுநர் பகிரங்கமாக கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு விரிவாக விசாரிக்க வேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள துணைவேந்தர் நியமனம் குறித்து விசாரணை மேற் கொள்ள வேண்டும். இதில் தவறுகள் நேர்ந்திருப்பதை உறுதி செய்து, ஊழல் முறைகளில் துணைவேந்தர் பதவியில் அமர்ந்துள்ளவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் துணைவேந்தர் பணி நியமனம் ஊழல், முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காத, வெளிப் படைத்தன்மை கொண்டதாக அமைந்திட, தமிழ்நாடு அரசு பொருத்தமான வழிமுறைகளை உருவாக்க வேண் டும். துணை வேந்தர் நியமன அதிகாரம், ஆளுநரிடம் இருப்பதை நீக்கி, மக்கள் பிரதிநிதித்துவ அரசிடம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 

-இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.


No comments:

Post a Comment