உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில் நடைபெற்ற விழாவில், மேனாள் நீதிபதி ஏ.கே. ராஜன் எழுதிய இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்த"CONSTITUTION OF INDIA - IS NOT WHAT IT IS" என்ற ஆங்கில நூலினை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பேராசிரியர் ரவிவர்மகுமார் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, முனைவர் ஏ. தியாகராஜன் (மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்), பி.பீ. சுரேஷ்பாபு (சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்) ஆகியோர் உரையாற்றினர். நூல் ஆசிரியர் மேனாள் நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். (22.10.2022 - மெரினா வளாகம், பிளாட்டினம் ஜூப்ளி கலையரங்கம் - சென்னை பல்கலைக் கழகம்).



No comments:
Post a Comment