புதுடில்லி, நவ 5 இந்தியாவில் கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியா முழு வதும் கரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. தற்போது ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதுகடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு - 1,216 மொத்த பாதிப்பு - 4,46,58,365 மொத்த உயிரிழப்பு - 5,30,479 குணமடைந் தவர்கள் எண்ணிக்கை - 4,41,12,181தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை - 15,705 இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 1,97,659 தடுப்பூசிகள் செலுத் தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,69,78,353 டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் நேற்று (4.11.2022) புதிதாக 72 ஆண்கள், 51 பெண்கள் உள்பட மொத்தம் 123 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது அதிகபட்சமாக சென்னையில் 32 பேர், செங்கல்பட்டில் 9 பேர் உள்பட 28 மாவட் டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு 10-க்கும் மேல் உள்ளது. மற்ற மாவட் டங்களில் பாதிப்பு 10-க்கும் கீழ் குறைவாக பதிவாகியுள்ளது. அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 29 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 29 முதியவர்களுக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. மருத்துவமனையில் 218 பேர் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கரோனா பாதிப்புக்குள்ளாகி 1,224 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
No comments:
Post a Comment