அரசியல் கொள்கைகளை புகுத்தி குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது சித்தராமையா கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

அரசியல் கொள்கைகளை புகுத்தி குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது சித்தராமையா கண்டனம்

பெங்களூரு, நவ 5 பள்ளிகளில் தியான வகுப்புகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் குழந் தைகளின் வாழ்க்கையில் அரசு விளையாடக்கூடாது என்று கூறி சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். 

கருநாடக சட்டசபை எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்ப தாவது:-  

பல்வேறு குழப்பங்கள் கருநா டகத்தில் பள்ளி-கல்லூரிகளில் யோகா-தியான வகுப்புகளை அறி முகம் செய்வதற்கு எனது ஆட்சே பனை இல்லை. ஆனால் பள்ளிகளில் எது முக்கியம்?. அங்கு கல்வி தானே முக்கியம். பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஸ் எதற்கு முக் கியத்துவம் அளிக்கிறார் என்பதே கேள்வி. ஒரு புறம் பள்ளிகளை நடத்த பொது மக்களிடம் பிச்சை எடுக் கப்படுகிறது. இன்னொருபுறம் தினந்தோறும் மாயாஜாலத்தை செய்து கொண்டிருப்பதை கண்டிக்கிறேன். 

பி.சி. நாகேஸ் பள்ளி கல்வித் துறை அமைச்சராக ஆன நாளில் இருந்து பாடத்திட்டங்களை திருத்துதல், ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி என பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவரது மனநிலை சீரான நிலையில் இருப்பதாக தெரியவில்லை. அவர் ஊழல்களில் மூழ்கியுள்ளார். யோகா, தியானம் மற்றவர்களை விட அமைச்சர் பி.சி.நாகேசுக்கு தான் அதிகம் தேவைப்படுகிறது.  கரோனாவை சரியான முறையில் நிர்வகிக் காததால் பள்ளிகளை மூடினர். குழந்தைகளின் கைகளில் அலை பேசிகளை வழங்கினர். இப்போது குழந்தைகளிடம் இருந்து அலை பேசிகளை பறிக்க தியான வகுப்புகளை தொடங்கி யுள்ளனர். 

இது பைத்தியக்காரத் தனமான முடிவு. இளம் குழந் தைகள் ஆடிப் -பாடி படிக்க வேண்டும். அதற்கு பதிலாக குழந்தைகளை அறையில் போட்டு தியானம் செய்யுமாறு கட்டாயப் படுத்தினால் உடல் ரீதியாக அவர்கள் இன்னும் சோர்வடைவார்கள். முதலில் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். கற்றலுக்கு தேவையான உபகரணங்களை குழந்தை களுக்கு வழங்க வேண்டும். பள்ளிகளில் கலை, இசை, விளையாட்டு பயிற்சி அளிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதை விடுத்து தங் களின் அரசியல் கொள்கைகளைப் புகுத்தி அரசு குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. 

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment