சென்னை, நவ. 8- தமிழ்நாட் டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதியும் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் நடை பெற உள்ள அரசு பொதுத் தேர்வு தேதிகளை பள் ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் நேற்று (நவ.7) அறிவித்தார். அப் போது அவர் கூறியது: "2022 - 2023ஆம் கல்வி யாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.2023இல் தொடங்கி 3.4.2023 வரை நடை பெறும். 7,600 பள்ளிக ளைச் சேர்ந்த மாணவர் கள் தேர்வு எழுகின்றனர். உத்தேசமாக 3 ஆயிரத் திற்கு மேற்பட்ட மய்யங் கள் அமைக்கப்படவுள் ளன. 8.8 லட்சம் பேர் உத்தேசமாக தேர்வு எழுத உள்ளனர்
2022 - 023ஆம் கல்வி யாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.2023இல் தொடங்கி 5.4.2023இல் வரை நடை பெறும். 7,600 பள்ளிக ளைச் சேர்ந்த மாணவர் கள் தேர்வு எழுகின்றனர். உத்தேசமாக 3 ஆயிரத் திற்கு மேற்பட்ட மய்யங் கள் அமைக்கப்படவுள் ளன. 8.5 லட்சம் பேர் உத்தேசமாக தேர்வு எழுத உள்ளனர்.
2022- 2023ஆம் கல்வி யாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 6.4.2022 முதல் 20.4.2023 வரை நடைபெறும்.
மொத்தம் 12,800 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த மூன்று பொதுத் தேர்வுகளையும் மொத்தம் 27 லட்சம் பேர். எழுத உள்ளனர்.
தேர்வு தேதி அறிவிக் கப்பட்டுள்ளதால் மாண வர்கள் உடனடியாக தங் களின் தயாரிப்பை தொடங் குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வேறு எந்த விடயத்திலும் உங் களின் கவனம் இருக்க கூடாது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான நல்ல சூழலை பெற் றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உருவாக்கி தர வேண்டும். மாணவர்கள் பயம் இல் லாமல் தேர்வு எழுத வேண் டும்" என்று அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment