ஆவடி.நவ,8. உடல்நலக் குறைவு காரணமாக கால மான கோரா உடலுக்கு கழகத்துணை தலைவர் வர் நேரில் இறுதி மரி யாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கலந்து கொண் டார்.
ஆவடி மாவட்டம் முத்தா புதுப்பேட்டை யில் தனது மகன் புவன் பாபு இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக நலிவுற்றிருந்த கோரா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் பட்டு வந்த கோவிந்தராசு தனது 71 ஆம் வயதில் நேற்று (7.11.-2022) காலை சுமார் 10 மணியளவில் காலமானார். மாலை 4.30 மணியளவில் கழகத் தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அவரது உடலுக்கு மாலையிட்டு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினார்.
எளிமையாக நடைபெற்ற இரங்கல் கூட்டம்!
அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வெளியில் இரங் கல் கூட்டம் எளிமையாக நடைபெற்றது. கோரா வின் இணையர் ஹேம மாலினி, மகள் தமிழரசி முன்னிலை வகிக்க, மாவட்டத்தலைவர் பா.தென்னரசு நிகழ்வை தலைமையேற்று இரங் கல் உரை ஆற்றினார். தொடர்ந்து ஆவடி நகர கழக தலைவர் கோ.முரு கன், மாவட்ட இளைஞர ணித் தலைவர் வெ.கார் வேந்தன், திராவிட மாண வர் கழக மாநிலச் செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர். இறுதியாக கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இரங்கல் உரை ஆற்றினார்.
எடுத்துக்காட்டான சுயமரியாதைக்காரர் கோரா!
அவர் தனது இரங்கல் உரையில், ”தோழர் கோரா மறைந்தாரே” என்று கழ கத்தின் தலைவர் ஆசிரி யர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை வாசித்தார். அவர் ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலு வலகத்தில் மொழிபெயர்ப் பாளராக பணியாற்றிய தையும், தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழி வல்லுந ராக இருந்ததையும், உண்மை, விடுதலை ஏடு களில் தொடர்ந்து எழுதி வந்ததை எடுத்துரைத் தார். பார்ப்பனியத்தை கோரா விவரிக்கின்ற முறையை வியப்புடன் சுட்டிக்காட்டினார். அவர் தீவிரமான கழகப் பற்றாளராக இருந்தது மட்டுமல்ல, தனது குடும் பத்தினர் அனைவரையும் இதே கொள்கையுடன் ஆளாக்கி, அனைவருக் கும் எடுத்துக்காட்டாக விளங்கியதையும் குறிப்பிட்டார். தவிர்க்க முடியாத நிகழ்வுதான். ஆகவே கோராவின் குடும் பத்தார் ஆறுதல் கொள்ள வேண்டும் என்று கூறி தனது இரங்கல் உரையை முடித்துக் கொண்டார்.
தமிழரசி, பூவழகி பாடை சுமந்து சென்றனர்!
இரங்கல் கூட்டம் முடிந் ததும் எழுச்சிகரமான முழக்கங்களோடு கோரா வின் இறுதிப்பயணம் தொடங்கியது. திருமுல் லைவாயில் பகுதியில் உள்ள மின் தகன மேடை யில் வைக்க தோழர்க ளோடு கோராவின் மகள்கள் தமிழரசி, பூவழகி இருவ ரும் கோராவின் உடலை சுமந்து சென்றனர். எழுச் சிகரமான முழக்கங்க ளோடு உடல் எரி தகன மேடைக்கு அனுப்பி வைக் கப்பட்டது. கழகத் துணைத் தலைவர் இறுதி வரை உடனிருந்து கோரா வின் தொண்டுக்கு மரி யாதை செய்தார்.
கலந்துகொண்ட தோழர்கள்!
நிகழ்வில் கோரா குடும்பத்தினர் புவன்பாபு, தமிழரசி, சோபன்பாபு, பூவழகி, பேரப்பிள்ளை கள் அருந்தமிழ் நவிலன், அழகோவியா மற்றும் உறவினர்கள் ஜெயக் குமார், நந்தகோபால், ராஜா, கன்னியப்பன், செவ்வாய்பேட்டை தோழர்கள் சுரேஷ், விஜய குமார், ஆவடி மாவட்டத் துணைத்தலைவர்கள் வேல்முருகன், அம்பத் தூர் கண்ணன், நகர கழ கச் செயலாளர் தமிழ் மணி, அமைப்பாளர் உடு மலை வடிவேல், முகப் பேர் முரளி, வை.கலை யரசன், பூவை பகுதித் தலைவர் தமிழ்ச்செல்வன், கலைமணி, அரும்பாக்கம் தாமோதரன், வஜ்ரவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகி ராமன், செயலாளர் முரு கேசன், பெரியார் ஆய்வு நூலகர் கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment