பேரிடரை எதிர்கொள்ள 65,000 களப்பணியாளர் தயார் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

பேரிடரை எதிர்கொள்ள 65,000 களப்பணியாளர் தயார் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

விருதுநகர் நவ 6  விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் பெரியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று (5.11.2022) நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இந்த 2 மாதங்களில் புயல் வந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும். புயல் வந்தாலும் அதனை சந்திக்க அனைத்து மாவட்ட நிர்வாகமும்  விழிப்புடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடற்கரையோர மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புடன் இருப்பதுடன், அவசர தேவைகளையும் தெரிவிக்குமாறு கூறியுள்ளோம். மீட்புப்படைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் பேரிடரை எதிர்கொள்ள 65 ஆயிரம் களப்பணியாளர்கள் தயாராக உள்ளனர். ஒரு ஊரில் மரம் விழுந்தாலோ, மின்கம்பம் சாய்ந்தாலோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்வு நடந்தாலோ, உடனடியாக எனக்கோ அல்லது அந்த பகுதி தாசில்தாருக்கோ களப்பணியாளர்கள் தகவல் கொடுப்பர். இவ்வாறு தெரிவித்தார்.


No comments:

Post a Comment