காஞ்சியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 800 பேருக்கு நியமன ஆணை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

காஞ்சியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 800 பேருக்கு நியமன ஆணை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம், நவ.6 இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், மற்றவர்களுக்கு வேலை வழங்கும் வகையில், தொழில் முனைவோர் களாக மாற வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறி வுறுத்தினார் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், குன்றத்தூர் ஒன் றியம், படப்பை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடக்கிவைத்து 800 பேருக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற் றுவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்

பின்னர், அவர் பேசியது:

கடந்த திமுக ஆட்சியின் போது காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15,000 ஏக்கர் நிலங்கள் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப் பட்டு, 1,000-க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டு, இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற் சாலைகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இனி வரும் காலங் களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில், உள்ளூர் இளைஞர்களுக்கு முன் னுரிமை வழங்க நடவடிக்கை எடுக் கப்படும்.

இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுபவர்களாக இல்லாமல், தொழில் முனைவோர்களாக மாறி மற்றவர்களுக்கு வேலை வழங்கு பவர்களாக உயர வேண்டும் என்றார் இந்த முகாமில் சுமார் 87 தனியார் நிறுவனங்களின் பிரிதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் நிறுவ னங்களில் பணியாற்ற இளைஞர் களைத் தேர்வு செய்தனர். இதில், 2,432 பேர் தங்களின் கல்வித் தகுதியைப் பதிவு செய்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட நிலையில், சுமார் 800 பேர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் சிறீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ.க்கள் செல்வபெருந்தகை, எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் அருணகிரி, ஒன்றியக் குழு தலைவர்கள் குன்றத்தூர் சரஸ்வதி மனோகரன், சிறீபெரும் புதூர் எஸ்.டி.கருணாநிதி உள் ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத் துறை அதிகாரிகள், பட்ட தாரி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment