திருவனந்தபுரம், நவ 9- கேரளா வில் சட்டமன்ற உறுப் பினர்களை விலைக்கு வாங்க முடியாததால் மக் களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசைக் கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தலை மையிலான இடது ஜன நாயக முன்னணி அரசுக் கும், மாநில ஆளுநருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. பல் கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச் சினைகள் தொடர்பாக மாநில அரசுக்கும், ஆளுந ருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், பல்கலை கழ கங்களில் வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மாசோதா நிறைவேற்ற அரசு முனைப்புகாட்டி வருகிறது. இந்த நிலையில் ஆளுநரை கண்டித்து வருகிற 15-ந் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்து உள் ளது. இதில் லட்சக்கணக் கான தொண்டர்கள் பங் கேற்பார்கள் என்று கூறப் படுகிறது.
இந்தநிலையில், கேரளாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செயல்படுவதாக ஆளுநர் ஆரிப் முகம்மது கான் அரசுக்கு எதிராக கூறியி ருந்தார். மேலும் பொது விவாதம் நடத்த தயார் என்றும் ஆளுநர் மாளி கைக்கு வந்து பாருங்கள் எனவும் சவால் விடும் வகையில் கருத்துகளை கூறி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கேரளாவில் சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியா ததால், அவர்களது குதிரை பேரம் நடக்காததால், அரசியல் சாசனத்திற்கு எதிராக மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடக்கிறது.
தனியாருக்கு விற்கப் படுகிறது நாட்டில் முக் கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள், நிறுவனங்கள் கூட இப் போது தனியார் மய மாக்கப்பட்டு விட்டது. மாநில அரசுக்கு உரி மைப்பட்ட பொது நிறு வனங்கள் அனுமதி இன்றி ஒன்றிய அரசு தனியாருக்கு விற்கிறது. ரயில்வேயில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் 10 லட்சம் பணி இடங்கள் நியமனங்கள் இன்றி காலியாக கிடக் கிறது என்று அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment