அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனம் 10 விழுக்காடு இடஒதுக்கீடு கிடையாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனம் 10 விழுக்காடு இடஒதுக்கீடு கிடையாது!

அமைச்சர் முனைவர் க. பொன்முடி திட்டவட்டம்

சென்னை, நவ. 9- "அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது" என்றும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கூறியுள்ளார். 

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலமாக தேர்வு செய்யப்படு வார்கள் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தோம். இதற் கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, டிஆர்பி மூலமாக அதற்கான உடனடியாக நடைபெறும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இந்த நிய மனங்களில் செல்லாது.

கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு தொடர்பான நட வடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. காலியிடங்கள் உள்ள அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம். அந்த காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் வாய்ப்புள்ளது.

அதேபோல், கல்லூரிப் பேராசிரியர்களுக்கான இட மாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரி பலர் கோரிக்கை விடுத் திருந்தனர். அதனடிப்படையில், இந்த இடமாற்றத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கலந்தாய்வில் 5408 பேர் கலந்துகொள்ள தகுதியானவர்கள். தற்போது 3,000 காலியிடங்கள் இருக்கின்றன. கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் கேட்கின்ற இடங்கள் இணையவழி மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும். ஒரே இடத்திற்கு இரண்டு பேர் விண்ணப்பித்தால், பணிமூப்பின் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.

பொறியியல் கல்வி பாடப்புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்ப்பு

இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர், 4ஆவது சுற்றிலும் பொறியி யல் படிப்புகளில் அதிகமான மாணவர்கள் சேர உள்ளனர். இந்த ஆண்டே தமிழ்வழிப் பாடங்கள் தொடங்கப்படும் அதற்கான நூல்கள் மொழி பெயர்க்கும் பணிகள் வேகமாக நடந்துகொண்டு வருகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்

தமிழ்நாட்டில் தற்போது பொறியியல் செயற்கைக்கான மூன்றாவது கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலை யில் நான்காவது கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

நான்காவது கட்ட கலந்தாய்வு 14ஆம் தேதி நிறை வடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 89 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து உள்ளனர். கடந்த ஆண்டு வெறும் 80 ஆயிரம் பேர் தான் சேர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பொறியியல் கலந் தாய்வு 4ஆவது சுற்று வருகிற 14ஆம் தேதி தான் நிறை வடைகிறது. இதுவரையில் 89,585 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சென்ற ஆண்டு 80,383 பேர் சேர்ந்து இருந்தனர். 10 ஆயிரம் பேர் அதிகமாக சேர்ந்து இருக் கிறார்கள். 4ஆவது சுற்றிலும் மாணவர்கள் சேர உள்ளனர். அதன் பின்னர் துணை கலந்தாய்வு காலி இடங்களுக்கு நடைபெறும் என்றார் அவர்.

No comments:

Post a Comment