செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

செய்திச் சுருக்கம்

வங்கி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட "திட்ட அறிக்கை வங்கி" ரூ.1 கோடி செலவில் உருவாக்க நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

விதைகள்

கடலோர மாவட்டங்களில் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல்!

முடியாது

எல்.அய்.சி. நிறுவன ஊழியர் பணியிட மாறுதல் நடைமுறைகளில் தலையிட தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பணிமூப்பில்

பேராசிரியர்களின் பணிமூப்பில் முதலில் பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினரை நியமிக்க வேண் டும் என ஆதிதிராவிடர் மாநில ஆணையம் உத்தரவு.

சட்டம்

அனுமதியற்ற கட்டடத்தை இடிப்பதே சட்டம் என்றும், கட்டுமானப் பணி முடிந்ததற்கான சான்று வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

அதிகாரம்

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பொறியியல் தொர்பான பணிகளுக்கான டெண்டர்களை அறிவிக் கும் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், தொழில்நுட்ப அனுமதி வழங்கும் அதிகாரிகள் மற்றும் அளவீடு அதிகாரிகளுக்கு நிதி தொடர்பான அதிகார வரம்பு மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

அரசாணை

சென்னை நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40 கோடி செலவில் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிதிஉதவி

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க நிதி வழங்கப்படு வதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தகவல்.

ரத்து

தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் சேர ரூ.15,000 ஊதிய வரம்பை நீக்கி உள்ள உச்சநீதிமன்றம், ஓய் வூதிய திட்டத்தில் கடந்த 2014இல் கொண்டு வரப்பட்ட திருத்தம் செல்லும் என உத்தரவு.


No comments:

Post a Comment