தேனியில் அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

தேனியில் அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு

தேனி, டிச. 24, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

தேனி சண்முகசுந்தரபுரம் கிரா மத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் கள் 10 பேர் சபரிமலைக்கு காரில் சென்று வழிபாடு முடித்து இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் குமுளி மலைச்சாலையில் உள்ள இரைச்சல் பாலம் அருகே வந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட் டிலிருந்து விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. தகவல் அறிந்து வந்த தமிழ்நாடு கேரள மாநில காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்து காரை மீட்டனர். கார் முல்லைப் பெரியாறு நீர் செல்லும் பெரிதான குழாய்கள் இடையே சிக்கியிருந் ததால் மிகுந்த போராட்டத்துக்கு இடையே காரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சம்பவ இடத்தி லேயே 7 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திலிருந்து 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் படுகாயங்க ளுடன் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந் தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது. விபத்தில் படுகாயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment