புதுடில்லி, டிச. 24, நாடாளுமன்றத்தில் ரூ. 92,570 கோடி மோசடி தொடர்பாக கடன் வாங்கி ஏமாற்றிய மல் லையா- நிரவ்மோடி உள் பட 50 பேர் பட்டியலை ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராத் வெளியிட்டார். இதில் முதலிடத்தில் வைரவியாபாரியான மெகுல் சோக்சி உள்ளார்.
அரசுக்குச் சொந்த மான வங்கிகளின் மொத் தச் செயல் படாத சொத் துக்கள் (ழிறிகிs) ₹ 8.9 லட்சம் கோடியாக உயர்ந்த பிறகு ₹ 3 லட்சம் கோடிக்கு மேல் குறைந் துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், உறுப்பினர் கள் வாராக்கடன் குறித்த எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஒன்றிய நிதித் துறை அமைச் சர்கள், மோசடி தொடர் பான தகவல்களையும் வெளியிட்டனர். இது தொடர் பாக நிதித்துறை இணைய மைச்சர் பகவத் கராத் எழுத் துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்தியாவில் உள்ள வங்கி கடன் வாங்கி ஏமாற்றியவர் களின் 50 பேரது பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களின் கடன் ரூ.92,570 கோடி எனவும் தெரிவித்துள் ளது. மெஹூல் சோக் சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ரூ.7,848 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்த வில்லை என கூறப்பட் டுள்ளது. ஈரா இன்ப்ரா நிறுவனம் ரூ.5,879 கோடியும், ரெய்கோ அக்ரோ ரூ.4,803 கோடி யும் செலுத்த வில்லை. கான்காஸ்ட் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் ரூ.4,596 கோடி கடனை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. மேலும் “அமலாக்கத்துறை அளித்த தகவலின் படி, 2014ஆம் ஆண்டில் இருந்து விஜய் மல்லயா, நீரவ் மோடி, நிதன் ஜயந்தி லால், சேடன் குமார், ஜயந்திலால் சந்திசாரா, திப்தி சேடன் சந்திசாரா, ஹித்தேஷ் குமார் ஆகி யோர் கடனை திருப்பி செலுத்தவில்லை என தெரிவித்தார். இதேப்போல் ஏபிஜி ஷிப்யார்டு, புரோஸ்ட் இண்டர்நேஷனல், வின்சம் டைமண்ட்ஸ் மற்றும் ஜிவல் லரி நிறுவனங்களும் கடன் பெற்று விட்டு வேண்டும் என்றே திரும்ப செலுத்த வில்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ரோடோமேக் குளோபல், கோஸ்டல் புரா ஜக்ட்ஸ், ஜூம் டெவலப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங் களும் ஒன்றிய அரசு வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment