தமிழ்நாட்டில் 8 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

தமிழ்நாட்டில் 8 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வு!

சென்னை, டிச. 24, தமிழ்நாட்டில்  8 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செய லாளராக பதவி உயர்வு  பெற்றுள்ளனர். இதற் கான உத்தரவை தலை மைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியில் 1992ஆம் ஆண் டில் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவி நிலையை உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் படி,  அவர்கள் ஏற்கெ னவே முதன்மைச் செய லாளராக வகிக் கும் அதே துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்த்தப் படுகிறார்கள் என தெரி விக்கப்பட்டு உள்ளது. அதன் படி, டாக்டர் ராதாகிருஷ்ணன்:  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளராக இருக் கும் நிலையில்,  அதே துறை களின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார். நீரஜ் மிட்டல்: தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட் டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செய லாளராகிறார். குமார் ஜெயந்த் மங்கத்ராம் சர்மா: பிற் படுத்தப்பட் டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறையின் கூடுதல் தலைமைச் செய லாளராகிறார். பிரதீப் யாதவ்: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறையின் கூடு தல் தலைமைச் செய லாளராக பதவி உயர்வு பெறுகிறார். குமார் ஜெயந்த்: வருவாய் மற் றும் பேரிடர் மேலாண் மைத் துறையின் கூடுதல் தலைமைச் செய லாள ராகிறார். கே.கோபால்: போக்குவரத்துத் துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.

ராஜேஷ் லக்கானி: தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் டான் ஜெட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்கு நரும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத் தின் தலைவராக இருந்த நிலையில், தற்போது கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்வு பெறுகிறார். ராஜேந்திரகுமார்: ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையின் கூடு தல் செயலாளராக பணி யாற்றும் ராஜேந்திர குமாருக்கும் கூடு தல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்வு அளிக்கப்படுகிறது. இவ் வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment