சமூக ஊடகத்தில் தொடரும் கழக தோழர்களின் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

சமூக ஊடகத்தில் தொடரும் கழக தோழர்களின் கலந்துரையாடல்

மதுரை, டிச. 12- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக சமூக ஊடகங்க ளில் தொடரும் திராவி டர் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட் டம் 05.12.2022 திங்கட் கிழமை மாலை 6 மணிக்கு மதுரையில் நடைபெற் றது.

மதுரை மேலமாசி வீதியில் உள்ள நாயுடு ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்காவின் தலை வர் மருத்துவர் சோம.இளங்கோவன் தலைமை யேற்றார். பெரியார் பன் னாட்டு அமைப்பினைச் சார்ந்த மருத்துவர் சரோஜா இளங்கோவன் முன்னிலை ஏற்றார். வந் திருந்த அனைவரையும் வரவேற்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனை வர் வா.நேரு உரையாற்றி யதோடு கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத் தார்.

கழக மாநில அமைப் புச்செயலாளர் வே.செல் வம் தொடக்க உரையாற் றினார். அவர் தனது உரையில் மருத்துவர் சோம.இளங்கோவனின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, பெரி யாரியலை உலகமெல் லாம் கொண்டு செல்லும் ஆசிரியர் அவர்களின் படையில் முதல் தளபதி யாக இருந்து பணியாற் றுபவர் மருத்துவர் சோம.இளங்கோவன், அவரை யும் மருத்துவர் அம்மா வையும் மதுரைக்கு வர வேற்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்குறிப்பிட்டு உரை யாற்றினார்.

கூட்டத்தில் சமூக ஊடகத்தில் தாங்கள் பணியாற்றுவதைப் பற்றியும், அதில் இருக்கும் இடர்பாடுகள் மற்றும் பெரும் ஊக்கம் பற்றியும் தோழர்கள் மு.சண்முக சுந்தரம், அருப்புக் கோட்டை விடுதலை தி. ஆதவன், அருப்புக் கோட்டை அழகர், தமிழ் ஓவியா என்ற பழனியைச் சார்ந்த வ.மாரிமுத்து, பா. அகல்யா, ஜோதி பாலா, சொ.நே.அன்புமணி, பெரி.காளியப்பன், கல் லூரி மாணவர் ரா.யுகேசு, கழக மணடலச் செயலா ளர் ந.முருகேசன், பேரா. வேங்கடரத்தினம், திரா விட முன்னேற்றக் கழகத் தைச் சார்ந்த வழக்குரை ஞர் இராம்.வைரமுத்து, பீபிகுளம் இரா.சுரேசு, கழக மாவட்டத்தலைவர் அ.முருகானந்தம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்டத் தலை வர்  நா.மணிகண்டன், விராட்டிபத்து சோ.சுப் பையா, கழக காப்பாளர் எஸ்.முனியசாமி, வே. செல்வம், வா.நேரு, மருத் துவர் அம்மா சரோஜா இளங்கோவன் உள்ளிட் டோர் உரையாற்றினார்.

நிறைவாக சமூக ஊட கங்களில் என்ன நிகழ்கி றது, எப்படி எல்லாம் நம் தோழர்கள் பணியாற்று கிறார்கள், நாம் இன்னும் என்னென்ன செய்ய இய லும், ஆசிரியர் எடுக்கும் பல்வேறு முயற்சிகளுக்கு நாம் எப்படி துணை நிற்பது என்பதைப் பற்றி ஒரு வழிகாட்டுதல் உரையை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர்  மருத்துவர் சோம.இளங்கோவன்  ஆற்றினார். 

தொடர்ந்து சமூக ஊடகத்தில் பணியாற்று பவர்களுக்கு ஓர் ஊக்க மூட்டலாக இந்த நிகழ்வு அமைந்தது. வழக்கமான கூட்ட பாணியில் அல்லா மல் வட்டமாக அனை வரும் அமர்ந்து கொண்டு அவரவர்கள் தங்கள் கருத்துகளை விரிவாக எடுத்துவைத்து ஆக்கபூர் வமான கலந்துரையாட லாக இந்தக் கூட்டம் அமைந்தது.

No comments:

Post a Comment