அமெரிக்கா வாழ் தமிழரும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சோம.இளங்கோவன் தனது சொந்த ஊரான பிச்சாண்டார்கோவிலில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமை 11-12-2022 அன்று காலை பத்து மணியளவில் தொடங்கி வைத்தார்.
ஊர் பொதுமக்கள் ஏராளமான அளவில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இம்மருத்துவ முகாம் நடைபெற மருந்து போன்ற பொருள்களை வழங்கி தொடர்ந்து நடைபெற வலியுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் அவருடைய துணைவியார் டாக்டர் சரோஜா இளங்கோவன் மற்றும் கழகத் தோழர்கள் திருச்சி மண்டலத் தலைவர் ஆல்பர்ட், மண்டல இளைஞரணிச் செயலாளர் அன்புராஜா, மாவட்ட கலை குழு தலைவர் பாச்சூர் அசோகன், செல்வி, பாலச்சந்திரன், பாலசுப்பிரமணியன்,பிச்சை மணி,பாபு,போஸ்டல் ராமசாமி, காமராஜ் மற்றும் கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment