கடவாசல், டிச. 7-- மயிலாடு துறை மாவட்டம் சீர் காழி ஒன்றியம் கடவாச லில் ஜாதிஒழிப்பு போரா ளிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் 28.11.2022 திங்கள் மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவ ரையும் வரவேற்க சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திர சேகரன் நிகழ்ச்சிக்கு தலை மையேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், குத் தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், கடவா சல் கிளைக்கழக தலைவர் சாமி.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் தொடக் கவுரையாற்றினார். அவர் தனது உரையில் இன்றைய சூழலில் இயக் கத்தின் செயல்பாடுகள் எவ்வளவு அவசியத் தேவையாக இருக்கிறது என்பதை சிறப்பாக எடுத் துரைத்தார். அவரைத் தொடர்ந்து மாவட்ட ப.க.செயலாளர் அ.சாமி துரை, வைத்தீஸ்வரன் கோயில் கிளைக்கழக தலைவர் வீ.ஆர். முத்தை யன், பகுத்தறிவாளர் கழக தோழர் கவிஞர் வெண்மணி, ப.வ.பெரியார்செல் வன், ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக கழக சொற் பொழிவாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அர சியல் கட்ட எரிப்பு போராட்டத்தினை தந்தை பெரியார் அறிவித்ததற்கான காரணத் தையும் போராட்டம் நடைபெற்ற காலச்சூழ லையும் அதில் ஈடுபட்டு பல மாதங்கள் சிறையேகி தங்கள் வாழ்வையே அர்ப் பணித்த தியாக சீலர்க ளின் தன்னலமற்ற பணி யையும், சிறையில் உயிர் நீத்த தொண்டர்களின் தியாகத்தையும் மிக அருமையாக விளக்கி, இப்படி ஒரு இயக்கத்தை தமிழ்நாடு மட்டுமின்றி உலகத்திலேயே காண இயலாது என்று உறுதி பட தெரிவித்தார்.
பெரியார் என்ன செய்தார் என்று இங்கே ஒரு சிலர் பிதற்றிக் கொண் டிருக்கிறார்கள். பெரியார் தொண்டர்களுக்கே இங்கு இணை யாரும் இல்லை என்பதை தக்க வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கினார். சுமார் 90 நிமிடங்கள் நீண்ட அவர் உரை தோழர் களை உணர்ச்சி வெள்ளத்தில் உறையவைத்தது. சீர்காழி ஒன்றிய செயலாளர் கட வாசல் செல்வம் நன்றி கூற கூட்டம் இரவு 9.30 மணிக்கு நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி தொடங்கும் முன் மாவட்ட தலைவர் குணசேகரன் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். பின்னர் வீர வணக்கநாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நிகழ்வில் பரசுராமன், ப.க.அமைப்பாளர் சி.வீர சேனன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காம ராஜ், ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி. இளங்கோவன், குத்தாலம் ஒன்றிய துணை செயலாளர் தி.சபாபதி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி.ஆர்.பாண்டியன், செயலாளர் பூ.பாண்டுரங்கன், கொள் ளிடம் ப.க தலைவர் பி. இளங்கோவன், சீர்காழி ப.க.தலைவர் கோ.சட்ட நாதன், மயிலாடுதுறை தங்க.செல்வராஜ், கட வாசல் தோழர்கள் சி. சண்முகம், டி.நாகராஜன், சீனு.ஞானசம்பந்தம், ம.திருஞான சம்பந்தம் மகளிரணி தோழர்கள் சாந்தி செல்வம், சாந்தி சந்திரன், தமிழ்மணி சந்தி ரன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment