1) டாக்டர் சென்பாலன், ஓமான்
அவருடன் உரையாடும்போது நாம் சொல்வதை அவ்வளவு கவனமாக கேட்பார். இளையவர் என்றோ, அனுபவம் குறைந்தவர் என்றோ, புதிதாக என்ன கூறிவிடப் போகிறார்கள் என்றோ சிறிதும் எண்ணாமல் ஆர்வத்தோடு கவனிப்பார்.
தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் ஒரு இடத்தில் வேலை பார்த்துவிட்டாலே சலிப்பை உணரும் தலைமுறைக்கு மத்தியில் சலிப்பின்றி அயராத உழைப்பிற்கு முன் மாதிரியாக இருப்பவர்.
அதேபோல் நான் ஆசிரியர் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய மற்றொரு பழக்கம் ஆவணப் படுத்துதல். கடந்த 100 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியலை, வரலாற்றை அவரது ஆவணங்களில் இருந்து மட்டுமே தெரிந்து கொள்ளலாம்.
இந்திய பார்ப்பனிய அடுக்கிற்கு எதிராக சமூக வலைதளத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலே விழுந்து பாய்ந்து பிறாண்டி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவதூறு பரப்பி, மொட்டைக் கடிதாசி போட்டு, தொல்லை கொடுத்து அவரை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் பார்க்கும் இந்நாட்டில், அந்த அடக்குமுறைக்கு எதிராக ஓர் அமைப்பை தொடர்ந்து நடத்தி வருவது எல்லாம் சாதாரண செயல் அல்ல, இமாலய சாதனை. பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு!
2) இராஜராஜன் ஆர்.ஜெ, சிங்கப்பூர்
ஒரு பகுத்தறிவு இயக்கத்தை கட்டிக் காப்பதும், ஒரு பழம்பெரும் சமூகத்தை, உணர்ச்சிப்பாதையில் மிகுந்து விடாமல் அறிவுப் பாதையில் இட்டுச்செல்வதும், நரிகளும்-ஓநாய்களும் உலவும் காட்டினில் தம்மக்களை காத்திட வேண்டும் என ஓயாமல் உழைத்திடவும் எல்லோராலும் முடியாது. அதைச் செய்வதால் தான் அவர் எங்கள் திசைக் காட்டியாக, எங்கள் ஆசிரியராக உள்ளார்!
3) பிலால் அலியார், துபாய்
இப்போது தான் "டுவிட்டர் ஸ்பேசில்" ஆசிரியர் பிறந்த தின 24 மணி நேர அமர்வில் என்னுடைய உரையை முடித்தேன்!
4) கார்த்திக் இராமசாமி, சிங்கப்பூர்
தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு ஆசிரியர்
கி.வீரமணி அய்யா அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்!
5) சுதாகர் பிச்சைமுத்து, பிரிட்டன்
கலங்கரை விளக்கம் ஒரு போதும் கப்பல்களிடம் இருந்து நன்றியை எதிர்பார்ப்பது இல்லை.
அப்படி எங்கள் இனத்திற்கு வாய்த்த ஒரு கலங்கரை விளக்கம், இனமான ஆசிரியர் அவர்கள். இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்ட பல தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள், புத்தகங்கள், பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுகள் யாவும் நம் இனத்திற்கு அவர் தந்த சொத்து.
சிறைவாசம், போராட்டம், ஒடுக்கப்பட்டவர்களுக் கான நலனுக்கு ஓங்கி ஒலிக்கும் குரல் என பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்தவர்.
இன்று ஆசிரியருக்கு 90 வயது அகவை நிரம்புகிறது. ஆனால், ஒரு இளைஞருக்கு உரிய துள்ளலோடு கூர்மையாக அவதானித்து மிடுக்கான குரலில் பேசுவார். அத்தனை உற்சாகமான மனிதர்.
என் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டும் என்று வேண்டிய போது, விழாவிற்கு நேரில் வருகை தந்து விழா முடியும் வரை மேடையில் இருந்து சிறப்பித்து வாழ்த்தி விட்டுச் சென்றார். விழா குறித்து விடுதலை முதல் பக்கத்தில் பாராட்டு மழை வேறு.
எத்தகயை உயரிய உள்ளம்.
எங்கள் ஆசிரியர் பெருந்தகைக்கு உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
நீடுழி வாழ்ந்து எம் இனத்தை வழி நடத்திட வேண்டுகிறேன்.
வாழ்க பல்லாண்டு. வாழிய நலமுடன்!
6) சேசாத்திரி தனசேகரன், நார்வே
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
7) வாசிங்டன் சிவா, அமெரிக்கா
90 வயதிலும் தமிழ் மக்களின் உரிமைக்கு தொடர்ந்து சலிக்காமல் போராடும் சமூக போராளி ஆசிரியர் அய்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை கடமை தவறாமல் போராடும் ஆசிரியரை எப்படி பாராட் டினாலும் தகும்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வரிசையில், அடுத்து ஆசிரியர் வீரமணி அய்யாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது.
ஆசிரியர் வீரமணி அய்யாவின் மக்கள் பணி குறிப்பாக இட ஒதுக்கீட்டில் அவரின் பங்கு மகத்தானது.
ஆசிரியர் அய்யாவிடம் நம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமான விசயங்கள் உள்ளது. குறிப்பாக தொடர் வாசிப்பு, தொடர்ந்து எழுதுதல், தொடர் பயணங் கள் இப்படி பல பல.
ஆசிரியருக்கு மீண்டும் வாழ்த்துகள்.




No comments:
Post a Comment