ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பங்கேற்பு

புதுடில்லி, டிச. 24, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி யின் இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தில் திமுக மக் களவை உறுப்பினர் கனி மொழி கலந்து கொண்டார்.

100 நாட்களை கடந்து ராகுல்காந்தி தனது பய ணத்தை மேற் கொண்டு வருகிறார். இந்நிலையில், அரியா னாவில் அந்த மாநில மேனாள் முதல மைச்சர் பூபிந்தர் சிங், மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங், குமாரி செல்ஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அதே போல் ராகுல் காந்தி யுடன் திமுக நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழியும் கலந்து கொண்டு நடந்து சென்றார். ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்பது குறித்து, திருமா வளவன் தனது டுவிட்டர் பக் கத்தில் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் இந்திய ஒற்றுமை நடைப் பய ணத்தைக் கடந்த நூறு நாட்க ளுக்கும் மேலாக மேற் கொண்டு வரும் திரு. ராகுல் காந்தி அவர் களின் அழைப்பையேற்று 24.12.2022 அன்று புது டில்லியில் அவருடன் நானும்தோழர் ரவி குமார் அவர்களும் பங்கேற்கி றோம் என்று தெரிவித் 

துள்ளார்.

No comments:

Post a Comment