இந்தியா வரும் பன்னாட்டு விமானப் பயணிகளுக்கு இன்று முதல் கரோனா பரிசோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

இந்தியா வரும் பன்னாட்டு விமானப் பயணிகளுக்கு இன்று முதல் கரோனா பரிசோதனை

புதுடில்லி, டிச. 24, மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் மாறு பாடு கரோனா பரவல் அதிக ரித்து வரும் நிலையில், இந்தியா முழு வதும் இன்று காலை 10மணி முதல் வெளிநாடுகளில் இருந்து வரும்  பன்னாட்டு பயணிகளுக்கு விமான நிலை யத்தில் கரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக் கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் தயாராக உள்ளன.

கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை மிரட்டி வந்த கரோனா தொற்று, தற்போது உருமாறிய நிலையில்,  ஒமிக் ரான் மாறுபாடான பிஎப்.7 என்ற வைரஸ் சீனா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுக ளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் 3 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும்,  பரவாமல் தடுக்க ஒன்றிய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இது தொடர் பாக ஒன்றிய சுகாதார அமைச் சர் மன்சுக் மாண்டவியா டில்லியில் உயர் மட்ட ஆலோ சனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.  தொடர்ந்து பிரதமர் மோடியும் கரோனா நிலைமை பற்றி டில்லியில் அவசர ஆலோசனை நடத்தி னார். அதைத் தொடர்ந்து, பன்னாட்டு விமான பயணி களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. அதன் படி,  விமான நிலையங்களில் இன்று முதல் கரோனா பரி சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.  முக்கி யமாக வெளிநாடு களில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே  கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, வெளி நாடுகளில் இருந்து பன்னாட்டு விமானங் களில் வரும் பயணி களில் 2 சதவீதத்தினருக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும். மரபணு பரிசோத னைக்கு உட்படுத்தப்படும் பயணிகளை அவர்களின் நாடு களின் அடிப்ப டையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்ய லாம்.  அந்த பயணிகளிடம் இருந்து மாதிரி களை சேகரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும். பரிசோத னையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரி களை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment