புதுடில்லி, டிச. 24, புதிய வகை கரோனா வைரஸ் உலக நாடுகளில் மீண்டும் பரவி வரும் நிலையில், மூக்கு வழி யாக செலுத்தப்படும் நாசல் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
தொற்றுப் பரவலை தடுப்பதில் இந்திய அரசின் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தின் தடுப் பூசிகள் பெரும்பங்காற்றின. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட சில தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித் துள்ள இன்கோவாக் (INCOVACC) எனப்படும் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு ஒன்றியஅரசு அவசர கால அனுமதியை ஏற்கெனவே வழங்கி உள்ளது. தற்போது மூக்கு வழியாக செலுத்தும் பூஸ்டர் கரோனா தடுப்பு மருந்துக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து கரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தடுப்புமருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித் துள்ளது.
சீனா அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் ஙிதி.7 என்ற உருமாறிய கரோனா தொற்று பரவல் அதிகரித் துள்ளது கடந்த ஒரு வாரத்தில் 1.48 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டு 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன. வெளிநா டுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்தில் பரிசோ திக்க அறிவுறுத்தப்பட்டு உள் ளது. மேலும் மக்கள் எச்சரிக் கையாக இருக்குபடியும் அறி வுரை கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புதிய வகை கரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப் படாது என கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசி எடுக்காதவர்களே பாதிப் புக்குள்ளாக நேரிடும் என்றும், தடுப்பூசி எடுத்துக் கொண்ட வர்கள் பயப்படத் தேவை யில்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
பாரத் பயோடெக் நிறுவ னத்தின் தயாரிப்பான, வீழிசிளிக்ஷிகிசிசிடி சமீபத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டின் கீழ் பன்மு கத்தன்மை கொண்ட பூஸ்டர் டோஸ்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் பெற்றது. இந்த நிலை யில், அதை பூஸ்டர் டோசாக உபயோகப்படுத்த ஒன்றியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. மூக்குவழி செலுத்தும் கரோனா மருந்தை இதுவரை எந்தவொரு நாடும் தயாரிக் காத நிலையில், இந்தியஅரசு நிறுவனமான பாரத் பயோ டெக் நிறுவனம் முதன்முதலாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
No comments:
Post a Comment