விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் வலைதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம் காவல்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் வலைதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம் காவல்துறை அறிவிப்பு

சென்னை,டிச.7- சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, பெரும்பாலான நேரங்களில் சென்னையின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் காணப்படுகிறது. இதனால் மக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டிய இடத் துக்குச் செல்லமுடியாமல் தவிக்கின் றனர். சில நேரங்களில் அவசர ஊர்திகள்கூட நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

இவற்றுக்குத் தீர்வு காணும் வகையில்‘கூகுள் மேப்’ மூலம் வாகன நெரிசலைக் கண்காணித்து அந்த பகுதி களுக்குப் போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து சென்று நெரிசலைச் சீர்படுத்தி வருகின்றனர். நெரிச லுக்குச் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் வாகன ஓட்டிகளின் விதிமீறல்களும் காரணமாகக் கூறப்படுகிறது. இதை யடுத்து சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்பை சென்னை காவல்துறையினர் கோரியுள்ளனர். மேலும் விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

சாலையில் சிக்னல்கள் தோறும் நின்று கொண்டு விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் தற்போது ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கட்டுப்பாட்டு அறையிலிருந்தவாறே விதிமீறல் வாகனங்களுக்கு அதிக எண்ணிக்கையில் அபராதம் விதித்து வருகின்றனர்.

 இந்நிலையில் விதிமீறல் வாகனங்கள் குறித்து பொதுமக்கள் வாட்ஸ்-அப்(9003130103), இன்ஸ்டாகிராம் (chennaitrafficpolice), ட்விட்டர்  (@ChennaiTraffic),   ஃபேஸ்புக் (Greater Chennai Traffic Police)   ஆகிய சமூக வலைத்தள பக்கத்தில் போக்குவரத்து காவ லர்களிடம் புகைப்படம் மற்றும் காட்சிப்பதிவு ஆதாரங் களை அடிப்படையாக வைத்து, போக்குவரத்து விதி மீறல் வாகன ஓட்டிகள் தொடர்பாகப் புகார் தெரிவிக்கலாம் எனச் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், "வாகனஓட்டிகள் சாலை விதி களைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். போக் குவரத்து காவல்துறையினர் இல்லை என நினைத்து சாலை விதிகளை மீறினால் கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்துவிடும். தற்போது அனைவரிடமும் ஸ்மாட்போன் உள்ளது.

அதன் மூலம் பொதுமக்களே விதிமீறல் வாகன ஓட்டி தொடர்பாகப் புகைப்படம் அல்லது காட்சிப்பதிவு வாயிலாக பதிவு செய்து அதைப் புகாராக அளித்து விடு வார்கள். எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்து, உயிரிழப்பை தடுப்போம். பாதுகாப்புடன் இருப்போம்" என்றனர்.

No comments:

Post a Comment