இந்து மக்கள் கட்சி அராஜகம் அண்ணல் அம்பேத்கருக்கு காவி உடையில் சுவரொட்டியாம்! : ஆசாமி கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

இந்து மக்கள் கட்சி அராஜகம் அண்ணல் அம்பேத்கருக்கு காவி உடையில் சுவரொட்டியாம்! : ஆசாமி கைது

கும்பகோணம்,டிச.7- அண்ணல் அம்பேத்கரின் 66ஆவது நினைவு நாளில் (6.12.2022) கும்பகோணம் பகுதியில் காவியாடை, இந்துமத அடையாளக்குறிகளுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் கொந் தளிப்பான சூழல் ஏற்பட்டது. அதனையடுத்து பதாகை அமைத்தவர்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். அதற்கு கடும் கண்டனத்துடன் எதிர்ப்பையும் தெரிவித்து காவல்துறை னிரிடம் முறையியீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அம்பேத்கரை காவியமயமாக்கும் சுவரொட்டிகளை ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை வீட்டுக்காவலில் காவல்துறையினர் வைத்தனர்.


No comments:

Post a Comment