சென்னை டிச.7 தமிழ்நாடு மருத்துவப் பதிவுச் சட்டம், 1914 அய் “முழுமையாக மாற்றியமைக்க” வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் நாடு மருத்துவ கவுன்சிலுக்கான(Tamil Nadu Medical Council, TNMC -_ டி.என்.எம்.சி.) தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தர விட்டுள்ளது.
ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் சுப்பிரமணியன், டி.என்.எம். சி.யை நிர்வகிக்கும் “தொன்மையான விதிகள்'' கொண்ட மெட்ராஸ் மருத்துவப் பதிவுச் சட்டத்தை முழுமையாக மறுசீரமைக்க வேண் டும் என்று தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.மெட்ராஸ் மருத்துவப் பதிவுச் சட்டம், 1914 மற்றும் இணைக்கப் பட்ட விதிகளை மூன்று மாதங் களில் முழுமையாக மறுசீரமைக் கவும், “மின்னணு அல்லது ஆன் லைன் வாக்களிப்பு” முறையை இணைத்து தேர்தல் செயல் முறையை புதுப்பிக்கவும் அவர் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட் டார்.
மேலும், இந்த நடைமுறைகள் முடிந்து புதிய கவுன்சில் பொறுப்பேற்கும் வரை மாற்று நிர்வாக ஏற்பாடுகளை மாநில அரசு செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்த ரேசன், காலாவதியான விதிமுறை களுடன், வாக்காளர்களை புதுப் பிக்காமல், தேர்தல் நடத்த முயற் சிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இறந்த வாக் காளர்களின் பெயர்கள் கூட பட்டி யலில் இருந்து நீக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலை நடத்தும் பதிவாளர் நியமனத்திலும் முறைகேடு நடந் துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட் டினார். அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முக சுந்தரம், பிரச்சினைக்குரிய சட்டம் மற்றும் விதிகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு கால அவகாசம் கோரினார். டிஎன்எம்சி சார்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் பி வில்சன், வாக்குப்பதிவு பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும், வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment