காவல்துறையினரை மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

காவல்துறையினரை மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது

கிருஷ்ணகிரி டிச.7 தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வந்த அரசுப் பேருந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காவல்துறையினருக்கும், பாஜக நிர்வாகிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள் ளனர். அங்கு சென்று காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பிலும் விசாரிக்கையில் இரு தரப்பின ருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட நிர்வாகிகள் சிலருடன் சேர்ந்து கொண்டு பாஜக மாவட்ட செயலாளர் ராஜா பணியில் இருந்த ரமேஷ் உள்ளிட்ட காவல் துறையினரை ஒருமையில் பேசிய தாகவும் கூறப்படுகிறது. 

மேலும், சட்டையை கழட்டி வைத்து விட்டு ஒத்தைக்கு ஒத்தை வா பாக்கலாம்” என கூறியதாகவும் அதையடுத்து சக காவல்துறையினர் அவரை சமாதானம் பேசி அனுப்பி வைத்தாகவும் கூறப் படுகிறது. 

இதுகுறித்து காட்சிப் பதிவு இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராஜா கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.


No comments:

Post a Comment