அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்
சென்னை, ஜன. 7- இந்திய அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங் களின் பட்டியலில் 14ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இன்று 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என, தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
உலகத் தமிழ் வம்சாவளி 9ஆவதுமாநாடு சென்னையில் நேற்று (6.1.2023) தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெ.செல்வக்குமார் வரவேற் புரை ஆற்றினார்.
தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இவ்விழாவில், பல்வேறு சாதனைகள் புரிந்த தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்ப ரசன் பேசியதாவது:
இந்த மாநாட்டின் மூலம், தமிழ் சமுதாயம் மேம்படவும், தமிழர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவும் வழி காணப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், பெரும் தொழிற்சாலைகளுக்குத் துணையாக இருந்து நாட்டின் சமச் சீரான தொழில் வளர்ச்சிக்கும், ஏற்று மதிக்கும் பெரும் துணைபுரிந்து வருகின் றன. மேலும், நமது நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறை யாக எம்எஸ்எம்இ துறை விளங்குகிறது. இந்திய அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் 14ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு இன்று 3ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் 5ஆவது நிலையிலிருந்து 3ஆம் நிலைக்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக 106 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது ரூ.174 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடுஅரசு வழங்கியது’’ என்றார்.
விஅய்டி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசும்போது, ‘‘இந்தியா வில் உயர்கல்வி பின்தங்கி உள்ளது. இந்தியாவில் உயர்கல்வி பெறுபவர் களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இது 50 சதவீதமாக உள்ளது. எனவே, கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கி, உயர் கல்வியை 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
மாநாட்டில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவள வனுக்கு ‘தென்னாட்டு அண்ணல்’என்ற பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் அவர் பேசும்போது, ‘‘அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிடும் அளவுக்கு நான் பொருத்தமானவன் கிடையாது. அவரது கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் எனது பணி. இலங்கைத் தமிழர்களின் பிரச்சி னையை பன்னாட்டு அரங்கில் கொண்டு சென்று தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மலேசிய நாட்டின் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.சரஸ்வதி, இலங்கை மேனாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப் பினருமான க.வி.விக்னேஸ்வரன், இலங்கை மேனாள் கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேச வன் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment