சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

சென்னை, ஜன. 4 - சென்னை யில்  நடைபெறுகின்ற பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அர சின் பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாடு அரசின் பங்களிப்புடன் தென்னிந் திய புத்தக விற்பனையா ளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை புத்தகக் காட்சி வரும் 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 

அதையொட்டி, டில்லி, கொல்கத்தா ஆகிய பெரு நகரங்களுக்கு அடுத்த படியாக தமிழ் நாட்டில் முதன்முறையாக, சென்னை யில் பன் னாட்டு புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகம் இணைந்து பன்னாட்டு புத்தகக் கண் காட்சியை நடத்துகிறது. சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 30 நாடு கள் வரை பங்கேற்க உள் ளன. உலகில் உள்ள அனைத்து முக்கிய நூல் களும் இங்குச் சங்கமிக்க உள்ளன. இந்நிலையில், பன்னாட்டு புத்தகக் கண் காட்சிக்கு அரங்குகள், அடிப்படை வசதி என அனைத்து செலவுகளுக் கும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment