பானிபட், ஜன.7 அரியா னாவில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் மீண்டும் நேற்று (6.1.2023) தொடங் கியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையி லான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணம் பல்வேறு மாநி லங்களை கடந்து கடந்த மாதம் அரியானாவை அடைந்திருந்தது. அங்குள்ள நூ, குருகிராம், பரிதாபாத் மாவட்டங் களில் 130 கி.மீ.க்கும் மேல் நடைபெற்ற இந்த பயணம், கடந்த 24-ஆம் தேதி டில்லிக்குள் நுழைந்தது. தலைநகரில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்த யாத்திரை பின்னர் உத்தரப்பிரதேசத்துக் குள் நுழைந்தது. அங்கும் நடைப் பயணம் நிறைவு செய்த ராகுல் காந்தி மீண்டும் அரியானாவின் பானிபட்டில் நுழைந்தார். பின்னர் ,மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்ட தனது தாய் சோனியாவை பார்ப் பதற்காக டில்லி சென்றார். அங்கிருந்து மீண்டும் நடைப்பயணத் தைத் தொடர்வதற்காக பானிபட் வந்தார்.
அங்குள்ள குராரில் இருந்து காலையில் பயணம் தொடங்கியது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராள மானோர் நடந்து சென்ற னர். குறிப்பாக அரியா னாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் களான பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, தீபிந்தர் சிங் ஹூடா, கரண் சிங் தலால், உதய் பான், குல்தீப் சர்மா என ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். அத்துடன் பிரபல சமூக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் ராகுல் காந்தியுடன் நடைப் பயணமாக சென்றனர். அந்தவகையில் பேரா சிரியர் ஷெய்லா சென் ஜசனாப், ஜெய் எச்.ஜச னாப், முகமது ஆரிப் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் ஏற் கெனவே சலசலப்பை உருவாக்கிய வெள்ளை நிற டி-சர்ட்டை அணிந்து ராகுல் காந்தி நடைப் பயணத்தில் நடந்து சென் றது மக்களின் கவனத்தை ஈர்த்தது. மாலையில் பானி பட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரை யாற்றினார்.
அப்போது அவர் ஜி.எஸ்.டி., அக்னிபத் போன்ற விவகாரத் தில் ஒன்றிய அரசை கடுமை யாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-
இங்கு 2 வகையான இந்தியாக்கள் உள்ளன. ஒன்று விவசாயிகள், தொழி லாளர்கள், சிறு வணிகர் கள் மற்றும் வேலை யில்லா இளைஞர்களை கொண்ட இந்தியா. மற் றொன்று நாட்டின் மொத்த சொத்தையும் 200 முதல் 300 பேர் வைத் திருக்கும் இந்தியா. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவை கொள்கைகள் அல்ல. மாறாக சிறு மற்றும் நடுத்தர வணிகத்தை அழிக்கும் ஆயுதங்கள். அக்னிபாத் திட்டம் என்றால் என்ன என்று முதலில் எனக்கு புரிய வையுங்கள். தாங்கள் தேச பக்தர்கள் என பா.ஜனதா வினர் கூறுகிறார்கள்.
அவர்களது தேசபக் தியை எனக்கு புரிய வையுங்கள். 21ஆ-ம் நூற் றாண்டில் வேலையில் லாத் திண்டாட்டத்தின் சாம்பியனாக அரி யானா இருக்கிறது. நீங்கள் ஒவ் வொரு வரையும் பின் னுக்கு தள்ளிவிட்டீர்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

No comments:
Post a Comment