பா.ஜ.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படும் ஆளுநர் : ஜவாஹிருல்லா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

பா.ஜ.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படும் ஆளுநர் : ஜவாஹிருல்லா

கும்பகோணம், ஜன.7- “பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” என்று  மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்  எம்.எச்.ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், “பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவில் கல்வி  கற்றவர்கள் அதிகம் உள்ள பகுதியாகவும், தொழில் துறையில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. காங்கிரஸ் மற்றும்  இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளாவிலும் கல்வி வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.”என்றார்.  தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் சமூக நீதிக் கொள்கை யினால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு முன்னேறிய  மாநிலமாக திகழ்கிறது.  இந்நிலையில், திமுக ஆட்சியால் மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு ஆளுநர் சமீபத்தில் அவரது மாளிகையில் கூறி  இருப்பது கண்டிக்கத்தக்கது. இவர், பாஜகவின் கொள்கை பரப்பு செயலா ளராக செயல்பட்டும், அந்த மாளிகை யையும் துஷ்பிரயோகம் செய்கிறார். என்றும் அவர் கூறினார்.


No comments:

Post a Comment