ஈஷா யோகா மய்யத்தில் நடப்பது என்ன? மர்மச் சாவுகள் - விசாரணை எங்கே? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

ஈஷா யோகா மய்யத்தில் நடப்பது என்ன? மர்மச் சாவுகள் - விசாரணை எங்கே?

தோழர் இரா.முத்தரசன் அதிரடி!

சென்னை,ஜன.3- இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

கோவை மாவட்டத்தில் நவீன சாமியார் ஜக்கி வாசுதேவ் நிர்வாகத்தில் உள்ள ஈஷா யோகா மய்யத்தில் காரணம் தெரியாத சாவுகள் தொடர்ந்து நடைபெறு கின்றன. தற்போது அவிநாசி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் மனைவி சுபசிறீ  மரணச்செய்தி வெளியாகியுள்ளது.

ஈஷா யோகா மய்யம் உச்சமட்ட அதிகார மய்யத்தின்   செல்வாக்கு எல்லைக்குள் அழுத்தம் கொடுக் கும் பெரும் “சக்தி”  பெற்றிருப்பதால் அத்துமீறல்களும்,  சாவுகளும் தொடர்வதாக ஆழ்ந்த சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இது போன்ற நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை மவுன சாட் சியாக இருந்து கடந்து போகக் கூடாது.

ஈஷா யோக மய்யத்தில்  பயிற்சிக் காக  கடந்த 11.12.2022 ஆம் தேதி உள்ளே சென்ற சுபசிறீ 18.12.2022 ஆம் தேதி வீடு திரும்ப வேண்டும். அன்று காலை 7 மணிக்கு மனை வியை அழைத்து வரச் சென்ற அவரது கணவர் பழனிகுமார்  11 மணி வரை காத் திருந்த பின்னர், அவர் காலையிலேயே சென்று விட்டதாக மய்யத்தினர் சொன் னது ஏன்? மனைவி காணவில்லை என ஆலாந்துறை காவல் நிலை யத்தில் பழனிக்குமார் கொடுத்த புகார் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை என்ன? அதில் கிடைத்த விபரங்கள் என்ன?  ஈஷா யோக மய்யத்தின் வாகனம் மூலம் சுபசிறீ இருட்டுப்பள்ளம் பகுதிக்கு கடத் தப்பட்டது ஏன்?, சுபசிறீ, வாடகை வாகனத்தில் இருந்து பதற்றத்து டன் பதறியடித்து தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது எப்போது, ஏன் நிகழ்ந்தது?   01.01.2023 அன்று சுபசிறீ கிணற்றில் பிணமாக மிதந்த அதிர்ச்சி செய் தியை தொடர்ந்து எடுத்த நட வடிக்கைகள் என்ன?

அரசு மருத்துவமனையில் இரவோடு, இரவாக உடற்கூராய்வு முடித்து, மின் மயானத்தில் தகனம் செய்தது ஏன்? மனைவி காணமல் போனது குறித்து புகார் கொடுத் துள்ள சுபசிறீயின்  குடும்பத்தினர், அவரது இறுதிக் காரியங்களை விருப்பபூர்வமக செய்தார்களா? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

ஈஷா யோகா மய்யத்தில் தொடரும் காரணம் தெரியாத சாவுகள், காணமல் போவோர் குறித்த புகார்கள், நில ஆக்கிரமிப்பு குறித்த முறையீடுகள் என எல்லாக் கோணங்களையும் விரிவாக விசா ரித்து, குற்றச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும். ஈஷா யோகா மய்யம் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட் பட  அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.  இதற்கான முறையில் நேர்மையும், சமூக அக்கறையும், நம்பகத்தன்மையும் கொண்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதி பதிகள் தலைமையில் விசாரணை நடத்தவும் சுபசிறீயின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்ற வாளிகளை கண்டறிந்து நட வடிக்கை எடுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  தமிழ் நாடு அரசை வலியுறுத்து கிறது.  

-இவ்வாறு அறிக்கையில் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment