ஒடுக்கு முறையாளர்களின் புகலிடமாகிறது பா.ஜ.க. சுபாசினி அலி சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

ஒடுக்கு முறையாளர்களின் புகலிடமாகிறது பா.ஜ.க. சுபாசினி அலி சாடல்

திருவனந்தபுரம், ஜன. 7  ஒடுக்கு முறையாளர்களின் புகலிட மாக பாஜக மாறி வருகிறது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் சுபாசினி அலி கூறினார். 

சமீப நாட்களாக நாட்டில் பெண் களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு திருவனந்தபுரத்தில் ஜனவரி 6 முதல் 9 வரை நடை பெறுவதையொட்டி சங்கத்தின் அகில இந்தியத் தலைவர்கள் மரியம் தாவ்லே, சுபாசினி அலி மற்றும் மாநில தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது சுபாசினி அலி மேலும் கூறியதாவது: அரியானாவில் விளை யாட்டுத்துறை அமைச்சர் மீது விளை யாட்டு பயிற்சியாளர் பாலியல் புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை. அமைச்சர் பதவியிலிருந்து மட்டும் விலகினார்.

டில்லியில் இளம் பெண்ணை காரில் இழுத்துச் சென்று கொன்ற நிகழ்வும்திகிலூட்டுகிறது. இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு காவல்துறையினர் நிகழ்வு இடத்துக்கு வந்தனர். இந்தக் காலத்திலும் பெண்கள் எதிர் கொள்ளும் வன்முறைகள் குறை யாமல் இருப்பது எவ்வளவு கொடு மையானது என்றார் சுபாசினி அலி. 

No comments:

Post a Comment