வைகோ கண்டனம்
சென்னை, ஜன.7 தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநர் ரவிக்கு எந்த அருகதையும் இல்லை” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கும் கருத்துகள் விஷமத்தன மானவை. “தமிழ்நாட்டில் ஒரு வித்தியாச மான அரசியல் சூழல் உள்ளது. எல்லா வற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால், அதனை வேண் டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழகம் என்று சொல்வதைவிட, தமிழ்நாடு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆர்.என்.ரவிக்கு எந்த அருகதையும் இல்லை. அதிகார ஆணவம் தலைக்கேறிய நிலையில், என்ன பேசுகி றோம் என்பதே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்
எல்லாவற்றையும் திட்டமிட்டு, ஆர். எஸ்.எஸ். இந்துத்துவா சனாதனக் கும்பல் போட்டுத் தந்த தடத்தில் நின்றுதான் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு நடைபெற்ற போராட்ட வரலாறு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆர்.என்.ரவிக்கு தெரி வதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி விடுதலைப் போராட் டத் தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு இவர் அறிந்திருப்பாரா?
1967 இல் பேரறிஞர் அண்ணா முதல மைச்சர் ஆனவுடன், 1967 ஜூலை 18 ஆம் தேதி, சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கோரி சட்டமன்றத் தில் தீர்மானம் முன்மொழிந்து நிறை வேற்றினார். இச்சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவர் இசைவினைப் பெற்று, 1969 ஜனவரி 14 பொங்கல் திருநாளில் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டப்பெற்று, நடைமுறைக்கு வந்தது. ‘தமிழ்நாடு’ என்று தொலைநோக்கோடு பேரறிஞர் அண்ணா சூட்டியப் பெயர் தமிழ் இலக்கியங்களிலே இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு என்றால், தமிழ் மொழியை நாடு; தமிழரை நாடு; தமிழ்ப் பண்பாட்டை நாடு என்று பொருள்படும். இது வெறும் பெயர் மட்டும் அல்ல, கோடானு கோடி தமிழ் மக்களின் ரத்த நாளங்களில் கலந்திருக்கின்ற தமிழ் உணர்வுதான் ‘தமிழ்நாடு’ என்று மலர்ந்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவி எல்லை மீறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. திராவிட இயக்கம் பற்றிய அவரது விமர்சனங்கள், அவர் பா.ஜ.க.வின் நிழல் தலைவர் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு’ பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மக்கள் வழியில் தமிழ்நாட்டு மக்களும் பாடம் புகட்டுவார்கள்" என்று அதில் கூறியுள்ளார்.
கே. பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை,ஜன.7- தமிழ்நாட்டை ஏற்க மறுக்கும் ஆளுநருக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியுள்ளது கடும் கண்டனத்துக் குரியதாகும். காசி - தமிழ் சங்கமம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட குயுக்தியான ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் இறுதியாக ஆளுநர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இதை பேசியுள்ளார். அதே பேச்சில் தமிழ் நாட்டின் தனித்தன்மை குறித்த எரிச்சலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு உள்ளிட்டு மொழிவழி தேசிய உரிமையை மறுதலித்து, ஒற்றை இந்தியாவை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ் திட்டம் எடுபடவில்லையே என்ற ஆத்திரமே அவர் பேச்சின் அடிநாதமாகும். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பாதகமில்லாமல் அதன் செயல்பாட்டை வலுப்படுத்துவதைத்தான் ஆளுநர் செய்ய வேண்டும். ஆனால் அந்த வேலையைக் கூட தாமதப்படுத்தி 20க்கும் மேற்பட்ட மசோ தாக்களை கிடப்பில் போட்டு வைத் திருக்கிறார் ஆளுநர் இரவி. புதிய கல்விக் கொள்கையை திணிக்க முயல்கிறார். பல்கலைக்கழகங்களில் மூக்கை நுழைக் கிறார். ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு எதிரான அவசர சட்டத்தை காலாவதி ஆக்கச் செய்து ‘ரம்மி ரவி' என்ற இழிபுகழை சம்பாதித்துள்ளார். இவைதான் இந்த ஆளுநரின் சாதனைகள்.
இதே ஆளுநர், கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் அரசியல் செய்ய முயற்சித்து கண்டிக்கப்பட்டார். தமிழ்நாட்டு அரசி யலில் மூக்கை நுழைத்து, பாஜக தலைவ ராகவே நடக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். விருப்பத்தை பேசி கண்டனங்களை பெறுகிறார்.
இந்திய விடுதலைக்கும், தமிழ் நாட்டின் உருவாக்கத்திற்கும் ஏராளமான உயிர்த் தியாகங்களை செய்துள்ளது தமிழ்நாட்டு மண்.
ஆனால், அதிலெல்லாம் எந்த பங்கும் இல்லாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். விடு தலைப் போராளிகளை காட்டிக் கொடுத்த துடன், மொழிவழி மாநிலம் என்ற ஏற்பாட்டையும், பல்வேறு கலாச்சாரங் களின் இருப்பையும் எதிர்த்து செயல்பட்ட இழிவான வரலாற்றிற்கு சொந்தக்காரர்களே சங்க பரிவாரத்தினர்.
இந்திய விடுதலைக்கு பிறகும், 1957 ஆம் ஆண்டு ஜன சங்கத்தின் தேர்தல் அறிக்கை, 'கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என்று பிரகடனப் படுத்துவோம்' என்று அறிவித்தது வெள்ளிடைமலை. அதையே கொல்லைப்புறம் வழியாக திணிக்க இப்போது அப்பட்டமாக முயற்சிக்கிறார் ஆளுநர்.
சட்டமன்றம் மற்றும் அரசின் நிர்வாக மொழிகள் அனைத்தும் தாய்மொழியில் நடக்க வேண்டுமெனவும், மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டுமெனவும் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக முதலில் ஆந்திர மாநிலமும், தமிழ்நாடு அமைவதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான போராட் டங்களும், நூற்றுக்கணக்கான உயிர்த் தியாகங்களை தொடர்ந்தே 1956 நவம்பர் 1-ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் 1961 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்ற மசோதாவை தோழர் பி.ராமமூர்த்தி கொண்டுவந்தார். அவர் சிறையில் இருந்த சூழலில், இந்த மசோதாவை முன்வைத்து வாதாடினார். மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர் பூபேஷ் குப்தா. அண்ணாவும் அதனை ஆதரித்தார். ஆனால் மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இவ்வாறு எழுச்சியுற்ற தமிழ் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கினர். அண்ணாவின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது. அதற்கு பிறகு, முத்தாய்ப்பாக நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” பெயர் சூட்டப்பட்டது. அந்த தீர்மானம் ஒன்றிய அரசின் ஒப்புதலை பெற்று அமலானது. இப்படிப்பட்ட வரலாற்றைத்தான் துச்ச மென பேசியுள்ளார் ஆளுநர்.
அனைத்து மொழிகளுக்கும் சமமான முன்னுரிமை, தாய்மொழிகளுக்கு ஊக்கம், தாய் மொழியில் நிர்வாகம், அனைத்து மக்களுக்கும் அதிகாரம் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகும். ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்தப் போக்கை தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment