‘லவ் ஜிகாத்’தை கிளப்பிவிட்டு பா.ஜ.க. இந்துக்களை அச்சுறுத்துகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

‘லவ் ஜிகாத்’தை கிளப்பிவிட்டு பா.ஜ.க. இந்துக்களை அச்சுறுத்துகிறது!

மும்பை, ஜன. 4- சிவசேனா கட்சியின் சாம்னா ஏட் டில் அக்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்  குறிப்பிட்டுள் ளதாவது;

“கடந்த 2022-ஆம் ஆண்டு காங்கிரஸ் மக்க ளவைப் உறுப்பினர் ராகுல் காந்தியின் தலைமைக்கு ஒரு புதிய ‘ஒளியை’  கொடுத்துள்ளது. 2023-ஆம் ஆண்டி லும் இந்தப் போக்கு தொடர்ந்தால், அடுத்த பொதுத் தேர்த லில் நாடு  அரசியல் மாற் றத்தைக் காணக் கூடும்.  பிரதமர் நரேந்திர மோடி யும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ‘வெறுப்பு மற்றும் பிரிவினையின் விதைகளை’ விதைக்கின்ற னர். ராமர் கோவில் விவ காரம் தீர்க்கப் பட்டுவிட் டதால், இந்த விவகாரத் தில் வாக்கு கேட்க முடியாது. எனவே, புதிய ‘லவ் ஜிஹாத்’ கோணம் ஆராயப்பட்டு வருகிறது.

இந்த ‘லவ் ஜிகாத்’ ஆயுதம், தேர்தலில் வெற்றி பெறவும், ஹிந்துக்கள் மத் தியில் அச்சத்தை ஏற்படுத் தவும் பயன்படுத்தப்படுகி றதா?. கடந்த மாதம் நடிகை துனிஷா சர்மா வின் மரணம் மற்றும் ஷ்ரத்தா வால்கர் அவரது காதலரால் கொல்லப் பட்டது, இவை “லவ் ஜிகாத்” வழக்குகள் அல்ல. ஆனால் எந்தவொரு சமூ கம் அல்லது மதத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணும் அட்டூழியங்களைச் சந்திக்கக்கூடாது.  2023 ஆம் ஆண்டில் நாடு ‘பய மற்றதாக’ இருக்கும் என்று நம்பு கிறேன். நடப் பது அதிகார அரசியல்.  ராகுல் காந்தியின் நடைப் பயணம் வெற்றி யடைந்து அதன் நோக்கத்தை அடை யும். ‘குறுகிய மனப்பான் மையை ஒழிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி கூறுகிறார். 

ஆனால், உண்மை என்னவென்றால், பாஜக-வின்  ஆட்சியில்தான் இந்த அணுகுமுறை வளர்ந்துள்ளது. இன் றைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளின் இருப்பு மற்றும் உரிமை களை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. ஹிந்துக் களுக்கும் முஸ்லிம்களுக் கும் இடையே பிளவை உருவாக்குவது ‘புதிய பிரி வினைக்கு’ வழிவகுக்கும். வேலை யின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் பாஜகவால் ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டன.”  

-இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment