சென்னை, ஜன. 3- தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளில் நடைபெற்று வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிக்கப் படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நடை பெற்று வரும் பழைய பேருந்து நிலைய பணிகள், சிதம்பரநகர் வணிக வளாக பணிகள் மற்றும் வி.வி.டி. சாலை பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (2.1.2023) நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநக ராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆட்சியர், அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மார்ச் மாதத்தில் பேருந்து நிலையம் திறப்பு தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால் திட்ட பணிகள் முடிவடைந்து உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையம் மற்றும் சிதம்பரநகர் வணிக வளாக பணிகளில் சற்று தாமதம் ஏற்பட் டுள்ளது.
அந்த பணிகளை தற்போது ஆய்வு செய்துள்ளோம். அடுத்த மாத (பிப்ரவரி) இறுதிக்குள் பணிகளை நிறைவேற்றி விடுவதாக ஒப்பந்த தாரர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற மார்ச் மாத தொடக்கத்தில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் சிதம்பரநகர் வணிக வளாகம் ஆகியவை திறக்கப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஏலம் மூலமே வழங்குவோம். ஏற்கனவே இங்கு கடை வைத்திருந்தவர்களும் ஏலத்தில் பங்கேற்று கடைகளை வாடகைக்கு எடுக்கலாம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பேருந்து நிலைய வாகன காப்பகமும் டெண்டர் மூலம் தனியாரிடம் கொடுக்கப்படும்.
அதில் தவறுகள் நடைபெறாமல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப் பார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சியில் நடை பெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளையும் வருகிற மார்ச் மாதத் துக்குள் நிறைவேற்றி விடுவதாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரித்துள் ளனர். இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக் குனர் தூத்துக்குடியில் நாளை (அதாவது இன்று) ஆய்வு செய்ய உள்ளார்.
எனவே, பணிகளை துரிதப் படுத்தி, வருகிற மார்ச் மாதத்துக்குள் பாதாள சாக்கடை திட்ட பணிகளையும் நிறைவேற்றி விடுவோம். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முறைகேடு நடை பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, அய்.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து 10 மாநகராட்சிகளிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த குழுவினரின் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. அறிக்கை வந்ததும் தவறு நடைபெற்றிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
10 மாநகராட்சிகளில்...
தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளில் நடைபெற்று வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளில் 80 முதல் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றினால் தான் ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கிடைக்கும். எனவே, தமிழ்நாட்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதத் துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment