கலை, விளையாட்டு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் பயிற்சிப் பட்டறையை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

கலை, விளையாட்டு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் பயிற்சிப் பட்டறையை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை,ஜன.5- கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை உள்ளிட்ட இலக் கியப் போட்டிகள், தமிழில் பிழையின்றி எழுதுதல், சம கால சூழலில் படைப்பு உரு வாக்கம் போன்ற பல் வேறு தலைப்புகளில் பயிற்சிப்  பட்டறை தொடக்க விழா சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நேற்று (4.1.2023) நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந் தினராகக் கலந்து கொண்ட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் நிகழ்வைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

தமிழ் மொழியின் மரபுகள், கலை, பண்பாட்டுச் சிறப்புகளை அடுத்த தலை முறைக்குக் கொண்டு செல் லும் நோக்கத்தில் இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது. எழுத்தும், பேச்சும் திராவிட இயக்கத்தின் முக்கிய அங்க மாகும். நாடக நடிகர், எழுத் தாளர், பேச்சாளர் எனப் பன்முக திறமையோடு இருந் தவர் மேனாள் முதலமைச் சர் முத்தமிழறிஞர் கலைஞர். பள்ளியில் படிக்கும்போது மற்ற பாடங் களில் தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே எடுப்பேன். ஆனால், தமிழில் 80 முதல் 90 மதிப்பெண் வரை எடுப் பேன். அதற்கு கலைஞரின் எழுத்தும், பேச்சும்தான் கார ணம். அவரது எழுத்துக்களை 'முரசொலி' பத்திரிகையில் படித்து வளர்ந்ததால் இயல் பிலேயே தமிழ் ஆர்வம் வந்தது. மாணவர்கள் கல்வி யோடு இலக்கியம், விளை யாட்டு போன்ற இதர திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

-இவ்வாறு அவர் கூறி னார்.

சென்னையில் இரு நாகரிகங்கள்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, ``நாகரிகம் உரு வான இடங்களை நதிக்கரை என்பார்கள். ஆனால், சென் னையில் மட்டும்தான் கடற் கரை, நதிக்கரை என இரு நாகரிகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக இலக்கியம் சார்ந்த நூலகங்கள் சென் னையில்தான் உள்ளன.

இந்தியத் துணைக் கண் டத்தின் வரலாற்றை நம் தமிழ் மண்ணிலிருந்துதான் எழுத வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரு கிறது'' என்றார். இந்நிகழ் வின்போது பொது நூலகத் துறை இயக்குநர் இளம் பகவத், சென்னை இலக்கியக் கழக நிறுவனர் கே.ஒளி வண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில்  இலக்கிய திருவிழா: சென்னை கோட் டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத் தில் தமிழ் மொழியின் இலக் கிய மரபுகளைக் கொண் டாடும் வகையில் இலக்கிய திருவிழா நாளை (ஜன.6) தொடங்கி ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெற உள் ளது. இதில் நூற்றுக்கும் மேற் பட்ட இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்று கின்றனர் மேலும், தமிழ் கலாச்சாரம் சார்ந்த நாடகங் கள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதுதவிர விழாவில் தமிழ் நாடு பாடநூல் கழகம் சார்பில் 100 நூல்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த விழாவை மக்கள் அனைவரும் கண்டு மகிழலாம். மேலும், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அரிய பருவ இதழ்கள், நூல்கள், ஆவணங்கள், தமிழகத்தை ஆண்ட மூவேந்தர் காலம் முதல் வெளிவந்த அரிய நாணயங்கள், சென்னையின் வரலாறு சார்ந்த படங்கள் ஆகியவை காட்சிப்படுத் தப்பட உள்ளன. 


No comments:

Post a Comment