நழுவுகிறார் ஆளுநர் தமிழிசை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

நழுவுகிறார் ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி ஜன.5  பாஜகவில் ஏற்பட்டுள்ள சூழல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, "நான் அரசியல் ரீதியாக பதில் சொல்ல முடியாது. ஆளுநராக உள்ளேன். கட்சித் தலைவராக இருந்தால் பதில் சொல்வேன்" என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மழுப்பலாக பேசிவிட்டு நழுவிச் சென்றார்.புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரிடம் தமிழ்நாடு பாஜகவில் பெண்கள் மோசமாக நடத்தப் படுகின்றனர். அவர்களது பாலியல் தொடர்பான உறவுகளை ரகசியமாக படம் பிடித்து மிரட்டப்படுகின்றனர்  என்று  அக்கட்சியில் இருந்து விலகிய நடிகையும் பாஜக வெளிநாட்டு மற்றும் கலைத்துறைத் செயலாளருமான காயத்திரி ரகுராமின் குற்றச்சாட்டு குறித்து ஊடகவிய லாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போதும் அவர் நான் ஆளுநராக இருக்கிறேன், ஆகவே அரசியல் நடவடிக் கைகளுக்கு பதில் கூறமுடியாது, நான் கட்சிப்பொறுப்பில் இருந்தால் இதற்கு பதில் சொல்வேன் என்று கூறிவிட்டு நழுவினார்.


No comments:

Post a Comment