தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது

சென்னை,ஏப்.12- இந்திய மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், அர சால் அங்கீகரிக்கப்படா மல் மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் இதுபோல் மருத்து வர் தொழில் செய்பவர் கள் மீது, சுகாதார துறை இணை இயக்குநர்களுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தர விட்டார்.

அதன் பேரில் தமிழ் நாடு முழுவதும் கடந்த 10 நாள்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத் தில் அதிகபட்சமாக 12 போலி மருத்துவர்கள் கைதாகி உள்ளனர். தஞ்சாவூரில் 10 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், சேலத்தில்- 6, புதுக் கோட்டை, தேனியில் தலா 5 போலி மருத்துவர் களும் கைது நடவடிக்கை யில் சிக்கி உள்ளனர்.

கடலூர், அரியலூர், திருவண்ணாமலையில் தலா 4 போலி மருத்துவர் கள் கைதில் அகப்பட்டு உள்ளனர். பெரம்பலூர், நாகப்பட்டினம், விழுப் புரத்தில் தலா 3 பேரும், தருமபுரியில் 2 பேரும், மதுரை, சிவகங்கை மற்றும் கரூரில் தலா ஒரு போலி மருத்துவரும் கைதாகி இருக்கிறார்கள்.

திருச்சி, கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் போலி மருத்துவர்கள் யாரும் இது வரை கைது செய்யப்பட வில்லை. நெல்லை, கன்னி யாகுமரி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மேலும் பல்வேறு மாவட் டங்களிலும் போலி மருத் துவர்கள் காவல்துறை வலையில் இதுவரை மாட்டவில்லை. ஆனால் கைது நடவடிக்கை தொடர்வதாக அறிவிக் கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment