அதானி நிறுவனங்களில் எல்அய்சி முதலீடு அதிகரிப்பு காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

அதானி நிறுவனங்களில் எல்அய்சி முதலீடு அதிகரிப்பு காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.12 அதானி குழுமத்தை ஜாமீனில் எடுக்க பொதுத்துறை நிறுவனமான எல்அய்சி பயன்படுத்தப்படு கிறது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச் வரையிலான காலாண்டில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் பங்குகளை எல்அய்சி வாங்கியுள்ளது. இதனால் டிசம்பர் வரையிலான காலாண்டில் 4.23 சதவீதமாக இருந்த பங்கு இருப்பு மார்ச் காலாண்டில் 4.26 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் மட்டு மின்றி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவற்றிலும் எல்அய்சி தன் முதலீடுகளை அதிகரித்துள்ளது. எல்அய்சி நிறுவனம் தனது வாடிக்கயை£ளர்களின் நிதியை பயன்படுத்தி வீழ்ச்சி அடைந்த அதானி குழுமங்களை மீட்க கட்டாயப் படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment