நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

நன்கொடை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா காரணாம்பட்டு கிராமத் தில் வசித்து வந்த பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுட ரொளி செ.ப.தருமன் (தையல் கலை ஞர்) அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை தினந்தோறும் கடைக்கு வருபவர்களிடமும், மாணவர்களிடமும் திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமாக  தனது இறுதிக் காலம் வரையில் பரப்பி வந்தார். இயக்கத்தின் அறிவிப்பின் படி 1979இல் மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கழகத் தோழர்களோடு வேலூர் மத்திய சிறைக்கு சென்றார். 

தனது மறைவிற்கு பின் உடலை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை வழங்குமாறு விருப் பம் தெரிவித்திருந்தார். நெஞ்சுவலி காரணமாக கடந்த 27.04.2010இல் மறைவுற்றார். அவருடைய விருப்பத்தின்படி 28.04.2010இல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவ ரது உடல் கொடையாக வழங்கப்பட்டது.

13ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது அடிச்சுவட்டில் தொடர்ந்து பயணிக்கும் வாழ்விணையர் சி.பேபிதருமன்,  மகன்கள் தரும வீரமணி (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), த.பாலாஜிகணேசன், மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் மூலமாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி!

No comments:

Post a Comment