திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டம்

அறந்தாங்கி, ஏப். 28- அறந்தாங்கி கழக மாவட்ட இளைஞரணி செயலா ளர் கா.காரல்மார்க்ஸ் ஏற்பாட்டில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் 26.4.2023 அன்று மாலை 6.00 மணி அளவில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவு நாள், வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு கந்தர்வ கோட்டை ஒன்றியச் செயலாளர் த.செல்வக்குமார் தலைமை தாங் கினார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் மா.தமிழ்மாறன் வரவேற்புரையாற்றினார்.

அறந்தாங்கி மாவட்டத் தலை வர் க.மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் வெ.அறி வொளி, அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் க.முத்து, பகுத்தறி வாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன், பொதுக் குழு உறுப்பினர் மு.சேகர், புதுக் கோட்டை மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் நே.குட்டி வீரமணி, புதுக்கோட்டை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் ச.யோகராஜ், மாங் கோட்டை திராவிட மாணவர்கழக அமைப்பாளர் த.கலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் தொடக்க உரை யாற்றினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட பொறுப் பாளர் உ.அரசப்பன், சிபிஎம்  ஒன் றியச் செயலாளர் வெ.ரத்தினவேல், ஜனநாயகத்திற்கான தொழிலாளர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ரெ.மூக்கையன் ஆகியோர் கருத் துரை வழங்கினர்.

சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன்  சிறப்பு ரையாற்றினார். இறுதியில் மாங் கோட்டை வெ.பிரவீன் நன்றிகூறினார்.

No comments:

Post a Comment