அவர்களது புகார் மீது விசாரணை நடக் கும் என்று ஒன்றிய அரசு கூறியது. ஆனால், விசாரணை நடக்கவில்லை. அதனால், தண் டனை பற்றிய கேள்வியே எழவில்லை. குற்ற வாளியை பாதுகாக்க ஒன்றிய அரசு விரும்பு கிறதா? டில்லி காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பது யார்? ஒரு கட்சியின் ஆணவம், விண்ணளவுக்கு உயர் வாக இருக்கும்போது, இதுபோன்ற குரல்கள் நசுக்கப்படுகின்றன. நமது சகோதரி களுக்கு ஆதரவு கொடுப் போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போராட்டத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப் பதாவது:- மல்யுத்த வீராங்க னைகள், நாடாளு மன்றம் அருகே கண்ணீருடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் குரலை யாரும் கண்டுகொள்ள வில்லை.

No comments:
Post a Comment