மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் அவலம் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் கோர மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் அவலம் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் கோர மரணம்

போபால், மே 10 மத்திய பிரதேசத்தின் தசங்கா பகுதியில் பாலத்தில் சென்ற பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, ஆற்றில் கவிழ்ந்தது. உள்ளூர் மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் கார் கோன் மாவட்டம் பெஜாபுரா பகுதியில் இருந்து தனியார் பேருந்து நேற்று காலை 6.30 மணி அளவில் இந்தூருக்கு புறப் பட்டது. இதில் 69 பயணிகள் இருந்தனர். காலை8.30 மணி அளவில் கார்கோன் மாவட்டம் தசங்கா கிராமத்தில் உள்ள ஆற்றுப் பாலத்தில் சென்ற போது, திடீரென கட்டுப் பாட்டை இழந்த பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 15 பேர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். மருத் துவமனையில் சேர்க்கப் பட்டு, 10 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத் தில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக் கும் என அஞ்சப்படு கிறது.

விபத்து குறித்து சுற்று வட்டார கிராம மக்கள் கூறிய போது, ‘‘சுமார் 50 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் பேருந்து கவிழ்ந் தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு உடனே அலைபேசியில் தகவல் கொடுத் தோம். அவர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால், இப்பகுதி மக்கள் இணைந்து, உயிருக்கு போராடியவர்களை மீட்டு டிராக்டர்கள் மூலம் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம். கோடை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இருந்திருந் தால் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும்’’ என்றனர்.

காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: 

‘மா சாரதா பஸ் சர்வீஸ்’ என்ற தனியார் பேருந்து வழக்கம்போல 9-ஆம் தேதி காலை பெஜாபுராவில் இருந்து புறப்பட்டுள்ளது. பேருந்தில் 52 இருக்கைகள் இருந்தன. ஆனால், அளவுக்கு அதிகமாக பயணி களை நடத்துநர் ஏற்றியுள்ளார். விபத்து நடந்தபோது பேருந்தில் 69 பயணிகள் இருந்துள்ளனர். தசங்கா பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் பேருந்து அதி வேக மாக சென்றுள்ளது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து தடுப் புச் சுவரில் மோதி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் 7 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு காவல் துறை வட் டாரங்கள் தெரிவித்தன


No comments:

Post a Comment