நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

புதுடில்லி , மே 10  உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பா னது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள் ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் தன்பா லினத் திருமணத்தை சட் டப்பூர்வமாக அங்கீகரிப் பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அர சியல் சாசன அமர்வு விசா ரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு முன், நேற்று 8-ஆவது நாளாக வழக்குரைஞர்கள் தங்கள் வாதத்தை முன் வைத்தனர்.

மத்தியபிரதேசம் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி வாதி டும்போது, “இந்த விவாதம் நாட்டின் பல்வேறு மூலைகளிலும் நேரலையில் ஒளி பரப்பாவதால் மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்கிறார்கள்” என் றார். இதற்கு தலைமை நீதிபதி கூறும்போது, “நீதி மன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு உண் மையில் எங்கள் நீதிமன் றத்தை சாதாரண மக் களின் வீடுகளுக்கும் அவர்களின் இத யங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது. நேரடி ஒளிபரப்பு நடைமுறை களின் ஒருபகுதியாக இதனை நான் கருது கிறேன்'' என்றார். உடனே துவிவேதி கூறும்போது, “கிராமப்புற மக்களுக்கு புரியாத மொழியான ஆங்கிலத்தில் நீதிமன்ற வாதங்கள் இருப்பது மட்டுமே இதற்கு ஒரே வொரு தடையாக உள் ளது'' என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி கூறும்போது, “நாங்கள் அது தொடர் பாகவும் பணியாற்றி வரு கிறோம். நேரடி ஒளிபரப் பின் உள்ளடக்கம் ஆங் கிலம் அல்லாத பிற மொழிகளிலும் அதே நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்ய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முயன்று வருகிறோம்'' என்றார். ‘ஜாமியத்-உலமா-இ-ஹிந்த்’ சார்பில் ஆஜ ரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கூறும்போது, “ஒருவர் ஆங்கிலத்தில் பேசுவதை ஜப்பானிய மொழி உட்பட பல்வேறு மொழிகளில் கேட்கும் தொழில்நுட்ப வசதி தற் போது உள்ளது'' என்றார்.


No comments:

Post a Comment