பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2இல் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2இல் தொடக்கம்

சென்னை, மே 6- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளில் (அரசு ஒதுக்கீடு இடங்கள்) முதலாமாண்டு சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. விருப் பமுள்ள மாணவர்கள்  www.tneaonline.org, www.tndte.gov.in  ஆகிய இணையதளங்கள் வாயி லாக ஜூன் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்‌.

இணைய வசதியில்லாதவர்கள் தங்கள் மாவட்டங்களில்‌ அமைக் கப்பட்டுள்ள இ-சேவை மய்யங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர் ரூ.500ம், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.250ம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். இணைய வசதியற்றவர்கள் வரைவோலை மூலமாக பதிவுக் கட்டணத்தை செலுத்தலாம்.

மாணவர்கள்‌ விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ் சரி பார்ப்புக் கான சேவை மய்யத்தை தேர்வு செய்துவிட வேண்டும்‌. அதேநேரம் விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென் னையில்‌ மட்டும் நேரடியாக நடை பெறும்‌.

இந்நிலையில், பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான கலந் தாய்வை வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 3ஆம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரேண்டம் எண் ஜூன் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு. சான்றிதழ் சரி பார்ப்பு ஜூன் 12 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும். ஜூலை 12ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இதனைத் தொடர்ந்து, பொறியியல் படிப்புகளுக்கான கலந் தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 முதல் 5ஆம் தேதி வரையும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரையும் நடை பெறுகிறது.

துணை கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரையும், எஸ்சிஏ மற்றும் எஸ்சி பிரிவுக்கான கலந்தாய்வு அக்டோ பர் 1 முதல் 3ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது என்று உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment