சிறையில் இருந்த கைதிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.3.30 கோடி நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

சிறையில் இருந்த கைதிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.3.30 கோடி நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, மே 6- தமிழ்நாட்டில் 660 மேனாள் சிறைவாசிகள் சுயதொழில் தொடங்க ரூ.3.30 கோடிக்கான காசோ லைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன் விடுதலை செய்யப் பட்ட 660 மேனாள் சிறைவாசிகளுக்கு, கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை,சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுய தொழில்கள் தொடங்க தலா ரூ.50 ஆயிரம்வீதம் ரூ.3.30 கோடிக் கான காசோலைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் நேற்று  (5.5.2023) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு 10 மேனாள் சிறைவாசிகளுக்குக் காசோ லைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங் கள், சிறைகள் மற்றும் சீர் திருத்தப் பணிகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா ளர் க.பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சென்னை சரக சிறைத் துறை துணைத் தலைவர் ஆ.முருகேசன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச் சர் ரகுபதி பேசியதாவது: இனிவரும் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகள் இடையேயும் போட்டிகள் நடத்தப் பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

மேலும், சிறைவாசிகள் தங்களது ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்காக, புத்தகக் கண்காட்சி மூலம் தமிழ்நாடு சிறைச் சாலைகளுக்கு இலவசமாக 70 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

 அந்த வகையில் சிறைச்சாலைகளில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் தமிழ்நாடு முதல மைச்சர் விரிவுபடுத்தி உள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment