அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு தமிழ்நாடு காவல்துறை கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு தமிழ்நாடு காவல்துறை கடிதம்

சென்னை, மே 6- இணையத்தில் 386 அவதூறு காட்சிப்பதிவு களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. 

தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை தொடர்ந்து சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்காக அதிகாரி களை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப் பாக அவதூறு பரப்பும் வகையில் போலியான முகவரி, போலியான இணையதளங்கள் மற்றும் வன்முறையை தூண்டும் விதமான காட்சிப்பதிவுகள் உள்ளிட்டவை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்படுகிறதா? என கண்காணிக் கப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், யூடியூப் தளங்களில் 40 சட்டவிரோத பதிவுகள், காட்சிப்பதிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டு மின்றி ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், உயரதிகாரி கள் குறித்து அவதூறாக பேசி வெளியிடப்பட்ட 386 காட்சிப்பதிவுகளை முடக்கக் கோரி யூடியூப் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் பொதுமக்களை தொடர்ந்து தற்கொலை செய்ய தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் 221 சட்டவிரோத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்.பி.அய். அனுமதி பெறாத மேலும் 61 கடன் செயலிகளை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment