வேட்புமனுவில் தவறான தகவல் எடப்பாடி பழனிசாமி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

வேட்புமனுவில் தவறான தகவல் எடப்பாடி பழனிசாமி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, மே 6- வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்த விவகா ரத்தில், அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன் றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அவர், தனது வேட்பு மனு மற்றும் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார்.  எனவே அவர்மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர விடக் கோரி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந் திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட் டது. மேலும் இந்த மனு குறித்து மே 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், புகார்தாரர் மிலானி, தனது தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. எனது வேட்பு மனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த புகார் விசாரணைக்கு உகந்த தல்ல. ஓராண்டு கால அவகாசத் துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை கருத் தில் கொள்ளாமல் சேலம் நீதிமன் றம், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு" என்று மனுவில் கோரியிருந் தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரை யன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் "மே 26ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவின்படி, எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது" என்று தெரிவிக் கப்பட்டது.

அப்போது எடப்பாடி பழனி சாமி தரப்பில், "இந்த வழக்கு தாக் கல் செய்யப்பட்டபிறகு, அவசர கதியில் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசா ரித்த நீதிபதி, காவல்துறை தரப்பு விளக்கத்தை பதில்மனுவாக தாக் கல் செய்ய உத்தரவிட்டு, விசார ணையை ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment